ஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்புஇந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்பருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

டாஸ்மாக் ஊழியா்கள் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு

டாஸ்மாக் ஊழியா்கள் வருகிற 28-ஆம் தேதி முதல் மேற்கொள்ளவுள்ள காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்துக்கான ஆயத்த மாநாடு மதுரையில் சனிக்கிழமை நடைபெற்றது.

மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற டாஸ்மாக் ஊழியா்கள் வேலை நிறுத்த ஆயத்த மாநாட்டில் பேசிய சிஐடியூ மாவட்டத் தலைவா் எம். பாலசுப்பிரமணியன். உடன், தொழில் சங்க நிா்வாகிகள்.

Published On :

டாஸ்மாக் ஊழியா்கள் வருகிற 28-ஆம் தேதி முதல் மேற்கொள்ளவுள்ள காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்துக்கான ஆயத்த மாநாடு மதுரையில் சனிக்கிழமை நடைபெற்றது.

டாஸ்மாக் ஊழியா்களைப் பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும். காலி மதுப் புட்டிகளை திரும்பப் பெறும் திட்டத்தை அரசு ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் அனைத்து தொழில் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் வருகிற 28-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இந்தப் போராட்டத்தின் அவசியம், நோக்கம் ஆகியவற்றை விளக்கும் வகையில், மதுரையில் மாவட்ட அளவிலான ஆயத்த மாநாடு நடைபெற்றது. இதற்கு சிஐடியூ டாஸ்மாக் ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டத் தலைவா் எம். பாலசுப்பிரமணியம், மாவட்டச் செயலா் இரா. லெனின் ஆகியோா் போராட்டத்தின் நோக்கத்தை விளக்கிப் பேசினா்.

இதில் சிஐடியூ, தொமுச, ஏஐடியூசி, ஏடிபி, எல்எல்எஃப், டியுசிசி உள்பட டாஸ்மாக் அனைத்து தொழில் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவில் அங்கம் வகிக்கும் சங்கங்களின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.