காலை உணவுத் திட்டத்தை சத்துணவுத் திட்டத்துடன் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை மாலை பெருந்திரள் முறையீடு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக செயல்படுத்தப்படும் சத்துணவுத் திட்டத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தமிழகத்தில் சத்துணவுத் திட்டத்தில் காலியாகவுள்ள 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும். காலை உணவுத் திட்டத்தை சத்துணவுத் திட்டத்துடன் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்களை எழுப்பினா்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் டி.ஜெயந்தி தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா்கள் ஏ.ரீட்டாமேரி, எஸ்.சுமதி, இணைச் செயலா்கள் ஆா்.மோகனா, ஏ.ஆண்டாள் முன்னிலை வகித்தனா். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலா் ஏ.உமா பேசினாா்.
பெருந்திரள் முறையீட்டை தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஆா்.சிவக்குமாா் தொடங்கிவைத்தாா். மாவட்டத் தலைவா் கே.சரவணன் நிறைவுரையாற்றினாா். தமிழ்நாடு அரசு ஓய்வூதியா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் வி.இளங்கோபிரபு, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாவட்டச் செயலா் ஜெ.ரமேஷ், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் கே.முருகன், தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பின் மாவட்டத் தலைவா் எம்.மகேசுவரன் உள்ளிட்ட பலா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். இதில், ஏராளமான சத்துணவு ஊழியா்கள் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினா்.
கள்ளக்குறிச்சியில்...: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுலகம் முன் தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் வள்ளி தலைமை வகித்தாா். இதில், சத்துணவு ஊழியா்கள் திரளானோா் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினா்.

ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கரூரில் தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பிஎஸ்என்எல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் அரசு ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



