பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசுவள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: இந்து சமய அறநிலையத் துறை நாட்டை பிளவுபடுத்தும் பாஜகதான் தேசவிரோதி! மக்களவையில் கனிமொழி!தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!
/

பாஜகவில் இணையுமாறு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனை

பாஜகவில் இணையுமாறு மகனுக்கு வந்த மிரட்டல்கள் குறித்து அபிஜீத் தீப்கேவின் தாயார் பேசியது தொடர்பாக...

News image

அனிதா தீப்கே / அபிஜீத் தீப்கே - எக்ஸ்

Updated On :30 ஜூலை 2026, 8:40 pm IST

பாஜகவில் இணையுமாறு தனது மகனுக்கு மிரட்டல்கள் வருவதாக அபிஜீத் தீப்கேவின் தாயார் அனிதா தீப்கே இன்று (ஜூலை 30) தெரிவித்தார்.

பாஜகவில் இணைய மகனுக்கு அறிவுறுத்துமாறும், இல்லையென்றால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டல் விடியோக்கள் வருவதாகவும் குறிப்பிட்டார்.

தற்போது வசித்துவரும் மகாராஷ்டிரத்தின் சத்ரபதி சாம்பாஜி நகரில் இருந்து தற்காலிகமாக வெளியேறுமாறும் பலர் கூறுவதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக உள்ளூர் மராத்தி செய்தி நிறுவனத்துக்கு அனிதா தீப்கே பேட்டி அளித்துள்ளதாவது:

''அரசியல் கட்சியைத் தொடங்கியதில் இருந்தே என் மகன் அபிஜீத் தீப்கேவுக்கு மிரட்டல்கள் வருகின்றன. ஆரம்பத்தில் இது குறித்து எங்களிடம் பகிர்ந்துகொண்டதில்லை. ஆனால், கட்சியில் இணையவில்லை என்றால், பெற்றோர்கள் குறிவைக்கப்படுவார்கள் என்ற மிரட்டல் வந்த பிறகே எங்களிடம் இது குறித்து என் மகன் கூறினார்.

மிரட்டல்களுக்கு அவர் அஞ்சவில்லை. ஆனால், இதுபோன்ற சூழல்களை நாங்கள் இதற்கு முன்பு கையாண்டதில்லை என்பதற்காகவே வருந்தினார். வீட்டில் இருந்து வேறு எங்காவது பாதுகாப்பாக தங்கியிருக்குமாறு எங்களிடம் பேசினார்'' என மகன் பேசியதை அனிதா குறிப்பிட்டார்.

இதற்கடுத்து 16 நாள்களுக்கு அவர்கள் மகாரஷ்டிரத்தின் கடற்கரைப் பகுதியான கொங்கனில் தங்கியிருந்தனர். அபிஜீத் தீப்கேவின் தந்தை பகவான் தீப்கே, குறைந்த ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தபோது மிகவும் கவலை அடைந்ததாக அனிதா சுட்டிக்காட்டினார்.

Summary

abhijeet Dipke's mother claims son was threatened to join BJP

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.