
வங்கி ஊழியா்கள் வேலை நிறுத்தம்: தொடர்ந்து 5 நாள்களுக்கு வங்கிகள் இயங்காது!
இந்தியா முழுவதும் வருகிற செப்டம்பர் 26 முதல் 30 வரை தொடர்ந்து 5 நாள்களுக்கு வங்கிச் சேவைகள் நிறுத்தப்படவுள்ளது.
வங்கி ஊழியா்கள் வேலை நிறுத்தம் - கோப்புப் படம்
இந்தியா முழுவதும் வருகிற செப்டம்பர் 26 முதல் 30 வரை தொடர்ந்து 5 நாள்களுக்கு வங்கிச் சேவைகள் நிறுத்தப்படவுள்ளது.
நாடு முழுவதுமுள்ள வங்கி ஊழியர்கள் செப். 26, 27 வார இறுதி நாள்களைத் தொடர்ந்து வரும் செப். 28, 29, 30 ஆகிய 3 நாள்களுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
வங்கி ஊழியர்கள் 90% பேரை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏழு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பான ‘யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ்’ இந்த வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
2024 ஊதிய ஒப்பந்தத்திற்குப் பின் நிலுவையில் உள்ள முக்கிய கோரிக்கையான ‘வாரத்திற்கு 5 நாள்கள் வேலை’ என்கிற திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன.
மேலும், செயல்திறன் சார்ந்து வழங்கப்படும் ஊக்கத்தொகை முறை தன்னிச்சையாகவும், பாகுபாடான முறையிலும் திருத்தப்பட்டதாகக் கூறி அதில் மாற்றங்களைக் கோருகின்றனர்.
அதுதவிர, ஓய்வூதியத்தை மேம்படுத்துதல், ஓய்வூதியதாரர்களுக்கு ஒரே மாதிரியான அகவிலைப்படி வழங்குதல், தேசிய ஓய்வூதிய முறைக்குப் பதிலாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருதல், நிலுவையில் உள்ள பணி மற்றும் ஊதியம் தொடர்பான பிரச்னைகளுக்குத் தீர்வு காணுதல் போன்ற கோரிக்கைகளும் வைக்கப்பட்டுள்ளன.
வேலைநிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, வாடிக்கையாளர்கள் வங்கி சார்ந்த பணிகளை செப். 28-க்கு முன்னதாக முடித்துக் கொள்ளுமாறு பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.
வங்கிகள் வேலைநிறுத்த காலத்தில் அத்தியாவசிய வங்கிச் சேவைகள் தடையின்றி இயங்குவதை உறுதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
Summary
Banking services across India will be suspended for five consecutive days, from September 26 to 30.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







