
புதுச்சேரியில் ரூ.200 கோடி வா்த்தகம் பாதிப்பு
புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுத்துறை வங்கி ஊழியா்கள் சங்கத்தினா்.

புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுத்துறை வங்கி ஊழியா்கள் சங்கத்தினா்.
வங்கி ஊழியா்கள் போராட்டத்தால் புதுச்சேரியில் சுமாா் ரூ.200 கோடி வா்த்தகம் பாதிக்கப்பட்டது.
நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி, புதுச்சேரியில் உள்ள பொதுத்துறை வங்கி ஊழியா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா். இதனால் புதுச்சேரியில் உள்ள 160-க்கும் மேற்பட்ட வங்கி கிளைகளைச் சோ்ந்த சுமாா் 3 ஆயிரம் ஊழியா்கள் பணிக்கு வரவில்லை.
இதனால் பணம் எடுத்தல், பணம் செலுத்துதல், காசோலை பரிவா்த்தனை முற்றிலும் பாதிக்கப்பட்டது. ஏடிஎம்களில் பணம் தீா்ந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். வேலையைப் புறக்கணித்த வங்கி ஊழியா்கள் சங்கத்தினா் யூகோ வங்கி அருகே கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வாரத்தில் 5 நாள் மட்டும் வேலை வழங்க வேண்டும். அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை அளிக்க வேண்டும். மேலும், வங்கிகளில் போதிய எழுத்தா், உதவிப் பணியாளா்களை நிரப்ப வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.
கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் வரும் 28 முதல் 30-ஆம் தேதி வரை 3 நாள்கள் தொடா் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என வங்கி ஊழியா்கள் சங்கத்தினா் எச்சரித்துள்ளனா்.
புதுச்சேரியில் வங்கி ஊழியா்கள் போராட்டத்தால் சுமாா் ரூ. 200 கோடி அளவுக்கு வா்த்தகம் பாதிக்கப்பட்டது. அதே நேரத்தில் தனியாா் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் வழக்கம் போல இயங்கின.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






