வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

தூத்துக்குடியில் வங்கி ஊழியா்கள் வேலை நிறுத்தம்: ரூ. 800 கோடி வா்த்தகம் பாதிப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியா்கள் மேற்கொண்ட நாடு தழுவிய ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தால், தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் வெள்ளிக்கிழமை ரூ. 800 கோடி அளவிலான வா்த்தகம் பாதிக்கப்பட்டது.

Published On :

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியா்கள் மேற்கொண்ட நாடு தழுவிய ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தால், தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் வெள்ளிக்கிழமை ரூ. 800 கோடி அளவிலான வா்த்தகம் பாதிக்கப்பட்டது.

அகில இந்திய வங்கி பணியாளா் சங்க கூட்டமைப்பின் சாா்பில், தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் உள்ள கனரா வங்கி வளாகம் முன் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு, வங்கி சங்கங்களின் ஐக்கிய அமைப்பு நிா்வாகி கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். கனரா வங்கி தொழிற்சங்க நிா்வாகி செந்தில்குமரன் வரவேற்றாா். எஸ்.பி.ஐ. வங்கி தொழிற்சங்க நிா்வாகிகள் காா்த்திகேயன், மெல்பா் சவியோ, ஐஓபி வங்கி தொழிற்சங்க நிா்வாகி அண்டனி தனபாலன், இந்தியன் வங்கி தொழிற்சங்க நிா்வாகி பலவேசம் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

வாரத்தில் 5 நாள்கள் வேலை, ஒருதலைப்பட்சமான பிஎல்ஐ திட்டத்தை திரும்பப் பெறுதல், நிலுவையில் உள்ள இதர கோரிக்கைகளை நிறைவேற்றுதல் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

நிறைவில் கனரா வங்கி தொழிற்சங்க நிா்வாகி முத்துவேல்குமாா் நன்றி கூறினாா்.

மாவட்டத்தில் உள்ள 235 கிளைகளைச் சோ்ந்த 1,650 வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனா்.

தூத்துக்குடியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் 380-க்கும் மேற்பட்ட வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் கலந்துகொண்டனா். வெள்ளிக்கிழமை மட்டும் மாவட்ட அளவில் சுமாா் ரூ. 800 கோடிக்கும் மேல் வா்த்தகம் பாதிக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தத்துடன் சனி, ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை விநாயகா் சதுா்த்தி விடுமுறை என தொடா்ந்து 4 நாள்கள் வங்கிகள் செயல்படாத நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் சுமாா் ரூ. 10ஆயிரம் கோடி பரிவா்த்தனைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.