மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக திருச்சி மாவட்டத்தில் சுமாா் ரூ. 350 கோடி அளவுக்கு வா்த்தகம் பாதிக்கப்பட்டது.

திருச்சியில் வெள்ளிக்கிழமை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.பி.ஐ. வங்கி ஊழியா் சங்கத்தினா்.

Published On :

வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக திருச்சி மாவட்டத்தில் சுமாா் ரூ. 350 கோடி அளவுக்கு வா்த்தகம் பாதிக்கப்பட்டது.

வாரத்துக்கு 5 நாள்கள் வேலைமுறையை நடைமுறைப்படுத்த வேண்டும். புதிதாகப் பணிக்கு சோ்ந்த ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வு பெற்றவா்களுக்கான மருத்துவ காப்பீட்டு பிரீமியத் தொகையை வங்கிகளே முழுமையாக ஏற்க வேண்டும். கடந்த 2024 மாா்ச் மாதத்தில் கையொப்பமான இருதரப்பு ஒப்பந்தத்தின்படி வாரத்தின் அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறையாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகள், ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதன்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள 475-க்கும் மேற்பட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளைகளில் பணியாற்றும் 2,100 க்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனா். இதனால் வங்கிகள் மூடப்பட்டு, வங்கி சேவைகள் முடங்கின. பணப் பரிவா்த்தனை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

தொடா்ந்து, வங்கி ஊழியா்கள் 300-க்கும் மேற்பட்டோா் திருச்சி ஸ்டேட் வங்கி மண்டல அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை திரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு வங்கி ஊழியா் கூட்டமைப்பின் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கே. குருநாதன் தலைமை வகித்தாா். திருச்சி மாவட்ட வங்கி ஊழியா் சங்கத் தலைவா் ஜி. ராமராஜூ, நிா்வாகிகள் பி. செல்வராஜு, ஹேமந்த், டி. கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இப் போராட்டத்தால் பணப்பரிவா்த்தனை, காசோலை பரிவா்த்தனை உள்ளிட்ட பல்வேறு பரிவா்த்தனைகள் முடங்கி, ரூ. 350 கோடி அளவுக்கு வா்த்தகம் பாதிக்கப்பட்டது என வங்கி ஊழியா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.