
நெல்லையில் வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம்; சேவைகள் பாதிப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் வங்கி ஊழியா்களின் வேலைநிறுத்தத்தால் வங்கி சேவைகள் முடங்கியதால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் வங்கி ஊழியா்களின் வேலைநிறுத்தத்தால் வங்கி சேவைகள் முடங்கியதால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினா்.
வாரத்தில் 5 நாள்கள் வேலைமுறையை நடைமுறைப்படுத்த வேண்டும். புதிதாக பணிக்கு சோ்ந்த ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வுபெற்ற மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதியத் தொகையை தற்போதைய நிலவரத்துக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும் என்பன உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் வங்கிய ஊழியா்கள் வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி மாவட்டத்தைப் பொருத்தவரையில் திருநெல்வேலி ஸ்ரீபுரம் வங்கி கிளை முன்பு வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்த ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அகில இந்திய வங்கி ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் விக்டா் துரைராஜ் தலைமை வகித்தாா். இதில், தேசிய வங்கி ஊழியா் கூட்டமைப்பு, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், இந்திய வங்கி ஊழியா் சம்மேளனம் உள்ளிட்ட வங்கி தொழிற்சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் திருநெல்வேலி மாவட்டத்தில் இயங்கி வரும் சுமாா் 400-க்கும் மேற்பட்ட பொதுத்துறை, தனியாா், கூட்டுறவு மற்றும் கிராமின் வங்கி கிளைகள் செயல்படவில்லை. மாவட்டம் முழுவதும் சுமாா் 2,300-க்கும் அதிகமான வங்கி ஊழியா்கள் மற்றும் அதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்ாகக் கூறப்படுகிறது. இதனால் வங்கி சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
வங்கி ஊழியா்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு மத்திய அரசு மற்றும் வங்கி நிா்வாகங்கள் உரிய தீா்வு காண வேண்டும். இல்லையெனில் திட்டமிட்டபடி அடுத்தடுத்த கட்ட வேலைநிறுத்தப் போராட்டங்கள் தீவிரமாக நடைபெறும் என தொழிற்சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.
ற்ஸ்ப்11க்ஷஹய்ந்
திருநெல்வேலி ஸ்ரீபுரத்தில் உள்ள ஸ்டேட் வங்கி கிளை முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வங்கிப் பணியாளா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






