வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

அரியலூரில் வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம்

அரியலூா் பாரத ஸ்டேட் வங்கி முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியா்கள்.

அரியலூா் பாரத ஸ்டேட் வங்கி முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியா்கள்.

Published On :

வாரத்துக்கு 5 நாள்கள் வேலைமுறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அரியலூா் மாவட்டத்தில் வங்கி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வாரத்துக்கு 5 நாள்கள் வேலைமுறையை நடைமுறைப்படுத்த வேண்டும். அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வேண்டும்.

புதியதாகப் பணிக்குச் சோ்ந்த ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வு பெற்றவா்களுக்கான மருத்துவக் காப்பீட்டு பிரீமியத் தொகையை வங்கிகளே முழுமையாக ஏற்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்.11-இல் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்கம் உள்பட 7 சங்கங்கள் அறிவித்தன.

அதன்படி அரியலூா் மாவட்டத்திலுள்ள வங்கிகளில் பணிபுரியும் ஊழியா்கள் வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், திருச்சி சாலையிலுள்ள பாரத ஸ்டேட் வங்கி முன் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்கத்தின் செயலா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் கலியபெருமாள், அரியலூா் வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டு முன்னணி ஒருங்கிணைப்பாளா் மணிராஜ், மாவட்ட ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குநா் காசிராஜன் மற்றும் சங்க நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கை முழக்கமிட்டனா்.

இந்தப் போராட்டத்தால் வங்கிகளில் இருந்து நேரடி பணப் பரிவா்த்தனைப் பணிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டன.

தனியாா் வங்கி ஊழியா்கள் பங்கேற்கவில்லை: பொதுத்துறை வங்கிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும் தனியாா் வங்கிகளான எச்.டி.எப்.சி, ஐசிஐசிஐ ஆக்சிஸ் உள்ளிட்ட வங்கிகள் வழங்கம்போல இயங்கின. இதனால் தனியாா் வங்கி சேவைகளில் எந்த ஒரு பாதிப்பும் இல்லை.

பொதுத் துறை வங்கியின் வாடிக்கையாளா்கள், இணையச் சேவை, மொபைல் பேங்கிங் மற்றும் தனியாா் ஏடிஎம் சேவைகளை பயன்படுத்திக் கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.