
முதல்வர் லண்டன் சென்றதை கிண்டல் செய்வதா? இது நல்லதல்ல! - மரிய வில்சன்
தமிழ்நாட்டில் ஊழல் இல்லாததால் வருவாய் அதிகரித்துள்ளதாக அமைச்சர் மரிய விலசன் தெரிவித்துள்ளது குறித்து...

அமைச்சர் மரிய வில்சன் - எக்ஸ்
தமிழ்நாட்டில் ஊழல் இல்லாததால் வருவாய் அதிகரித்துள்ளதாக தமிழக நிதியமைச்சர் மரிய விலசன் இன்று (செப். 21) தெரிவித்தார்.
மேலும், முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்ற முதல்வரை கிண்டல் செய்வது நல்லதல்ல எனவும் எச்சரித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுடன் அமைச்சர் மரிய வில்சன் பேசியதாவது:
''ஊழல் இல்லாத காரணத்தால் பத்திரப்பதிவுத் துறையில் வருவாய் அதிகரித்துள்ளது. ஊழல் இல்லை என்பதால் பத்திரப்பதிவுக்கு அதிகம்பேர் வருகின்றனர்.
கடந்த ஆட்சியை ஒப்பிடுகையில் கடன் அளவை குறைத்து வருகிறோம். தமிழக அரசின் வருவாயை பெருக்கும் நடவடிக்கையை எடுத்து வருகிறோம்.
முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல. தவெக ஆட்சியில் வரி வசூல் முறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஊழல் இல்லாமல் வரி வசூல் நடைபெறுகிறது. வெளிப்படையான, தூய்மையான ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது'' எனக் குறிப்பிட்டார்.
Summary
It is not right to mock the Chief Minister for visiting London to attract investments Marie Wilson
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





