தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்குற்றால அருவிகளில் குளிக்க அனுமதிகேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? கேள்வி எழுப்பியிருப்பது யார்?

பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா என்று ஸ்மிருதி இராணி கேள்வி..

smriti-irani-pti_083057

Published On :

சமூக வலைத்தளங்களில், எதிர்கருத்து பதிவிடுபவர்களுக்கு எதிராக ஒரு முக்கிய குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி.

சமூக வலைத்தளத்தில் அனைவருக்கும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்த முழு சுதந்திரம் உள்ளது. ஆனால், அதனை தவறாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, அரசியலில் இருந்து ஒதுங்கி, தொலைக்காட்சி வாய்ப்புக் கேட்டது குறித்து மனம் திறந்து பேசியிருந்தார் ஸ்மிருதி இராணி.

தற்போது, தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில், வெளியிட்டிருக்கும் பதிவில், கருத்துச் சுதந்திரம் என்பது, மற்றவர்களை துன்புறுத்தும் ஆயுதமாக மாற்றிக் கொள்ளக் கூடாது. தற்போது பலரது குரலையும் அறிந்து கொள்ளும் ஒரு வழியாக சமூக வலைத்தளங்கள் மாறியிருக்கின்றன. ஆனால், மற்றொருபக்கம், யாரையும் துன்புறுத்தும் வகையில் இந்த கருத்துச் சுதந்திரம் இருந்துவிடக் கூடாது என்று பதிவிட்டுள்ளார்.

பொது வாழ்வில் இருப்பவர்கள் இவ்வாறு சமூக வலைத்தளங்களில் எதிர்மறைக் கருத்துகளை எதிர்கொள்ளும்போது, இதனை சகித்துக் கொள்ளத்தான் வேண்டும் என்கிறார்கள். அது உண்மைதானா? என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

பொது வாழ்வில் வருவது என்பது, எங்களது சுய மரியாதையை இழந்துவிடுவது என்பது அர்த்தமாகுமா? என்றும் பதிவிட்டுள்ளார்.

ஒரு சில நொடிகளில் டைப் செய்து வெளியிடப்படும் கருத்துகள், பலரது வாழ்வில் எவ்வளவு பெரிய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்பதை யாரும் உணர்வதில்லை.

கருணையோடு நடந்து கொள்ளுங்கள், அது ஒன்றும் அவ்வளவு கடினமானது அல்ல ஆனால், அது பல நேரங்களில் உங்களுக்கே தெரியாமல் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நிறைவாக பதிவு செய்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.