முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா என்பது குறித்து..

மரகதம் குமரவேல், சத்தியபாமா

Published On :

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் காவல்துறை பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது என்றால் அது அவசியம்தான் என்று மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் கூறினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பெ. சண்முகத்திடம் தவெக வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்று வெளியாகும் தகவல் குறித்து கேட்கப்பட்டது.

இது குறித்து பதிலளித்த பெ. சண்முகம், பல இடங்களில் தவெக வேட்பாளர்கள் பொதுமக்களால் விரட்டியடிக்கப்பட்டிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகின.

அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டு, அதனை ராஜினாமா செய்துவிட்டு தவெக சார்பில் போட்டியிடுகிறார்கள். இவர்கள் ராஜிநாமா செய்யாமல் எம்எல்ஏவாகவே இருந்திருக்க முடியும்.

அப்படியிருக்கையில் எம்எல்ஏ பதவியை 20 நாள்களில் ராஜிநாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதால் அவர்களை மக்கள் எதிர்க்கிறார்கள் என்று செய்தி வருகிறது.

மக்களின் வெறுப்பிலிருந்து வேட்பாளர்களை பாதுகாக்க போலீஸ் பாதுகாப்பு போடப்படுவதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு அச்சுறுத்தல் இருந்தால் பாதுகாப்பு போடுவது சரிதான் என்று சண்முகம் கூறியுள்ளார்.

மேலும், தமிழகத்தில் ஊழல், முறைகேடு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் அவர்கள் இருக்கிறார்கள். ஊழல், முறைகேடு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலுவாக முன்மொழிந்துள்ளது.

முதல்வர் அவர்கள் தன்னுடைய மேஜையில் கோப்புகள் இருப்பதாகவும் அதை எப்போது வேண்டுமானாலும் திறப்போம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர்கள் ஆட்சியமைத்து 4 மாதங்கள் அகிவிட்டது. அவர்களிடம் இருக்கும் ஆவணங்களின் அடிப்படையில் முறைகேடுகள் நடந்தது நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை ஆதவ் அர்ஜூனா சார்பாக நான் வழி மொழிகிறேன்.

எல்லா ஆட்சிக் காலத்திலுமே ஆதரவு - எதிர்ப்பு என இரட்டை நிலைப்பாட்டை கொண்டிருக்கிறறோம். மக்களுக்கு நல்ல திட்டங்களைக் கொண்டு வரும்போது ஆதரிப்போம். எதிரான திட்டங்கள் என்றால் உறுதியாக நாங்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளம். இதுதான் எங்கள் அணுகுமுறை.

எங்கள் அணுகுமுறை புரியாத நிலையில்தான் தவெகவில் உள்ள சில அமைச்சர்கள் எங்களைப் பற்றி இப்படி சொல்லிக் கொண்டிருக்கிறார்களா? என்பது தெரியவில்லை. அவர்கள் திட்டுகிறார்கள் என்பதால் மாற்றிக் கொள்ள முடியாது. எங்கள் அணுகுமுறை இப்படித்தான் தொடரும்.

ஆதரவு, எதிர்ப்பு, இடித்துரைப்பது என அனைத்தும் தொடரும் என்றும் பதிலளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER