மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சுகன்யா - பரந்தாமன் - dmk
தமிழகத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் மதுராந்தகம் தொகுதியில் வழக்குரைஞர் ஐ. பரந்தாமன், தாராபுரத்தில் வழக்குரைஞர் எஸ். சுகன்யா போட்டியிடுவார்கள் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில், முக்கிய கட்சித் தலைவர்கள் இன்று அவரது வீட்டில் இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடத்தினர்.
திமுகவின் உள்கட்சித் தேர்தல், மாவட்டச் செயலர்கள் தொகுதிக்கான தேர்வுகள் நடைபெற்று வந்தாலும் மக்களுடன் திமுக எப்போதும் நிற்கும் என்பதை உறுதி செய்யும் வகையில் இடைத்தேர்தலில் திமுக போட்டியிட வேண்டும் என கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியதாகவும், அதனை அனைவரும் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
ஆலோசனைக்குப்பின் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், வரும் அக்.6ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறவிருக்கும் மதுராந்தகம் (தனி) பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் வழக்குரைஞரும் திமுக சட்டத்துறை இணைச் செயலாளருமான ஐ. பரந்தாமன் போட்டியிடுவார்.
அதுபோல, தாராபுரம் (தனி) பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் வழக்குரைஞர் எஸ். சுகன்யா போட்டியிடுவார் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும், இடைத்தேர்தலின்போது பொதுவாக திமுக சார்பில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவர். இடைத்தேர்தல் நேரத்தில் மாவட்டச் செயலாளர்கள் பொறுப்பாளர்களாக செயல்படுவார்கள். இந்த முறை சிறப்பு நிர்வாகிகள் நியமிக்க தலைமை திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இடைத்தேர்தல் நடைபெறும் பேரவைத் தொகுதிக்கு அருகில் உள்ள மாவட்டங்களில் உள்ள திமுக நிர்வாகிகளும் தேர்தல் பணியில் ஈடுபடவும் ஸ்டாலின் அறிவுறுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
Summary
DMK candidates announced Maduranthakam Dharapuram by elections
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



