FOLLOW US

ON GOOGLE DISCOVER

விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!

தமிழகத்தில் இடைத்தேர்தல் அறிவிப்பு பற்றி...

TN Byelection announced

கோப்புப் படம் - IANS

Published On :7 செப்டம்பர் 2026, 6:17 pm IST

தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவைச் சேர்ந்த மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்தனர்.

தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர். விஜயபாஸ்கர் (கரூர்) தங்களது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்தனர்.

இத்துடன் முதல்வர் விஜய் 2 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், பெரம்பூர் தொகுதியை தக்கவைத்துக்கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜிநாமா செய்தார்.

இதனால் தமிழகத்தில் காலியான தொகுதிகளின் எண்ணிக்கை 7 ஆக உள்ளது.

இந்த நிலையில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இன்று இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அக். 6 ஆம் தேதி மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இடைத்தேர்தல் விவரம்...

வேட்புமனு தாக்கல் தொடங்கும் நாள் - செப். 9

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் - செப். 16

வேட்புமனு மீதான பரிசீலனை - செப். 17

வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள் - செப். 19

வாக்குப்பதிவு நாள் - அக். 6

வாக்கு எண்ணிக்கை - அக். 9 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற தொகுதிகளில் தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் மீதியுள்ள 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

By-election announced for Maduranthakam and Dharapuram constituencies

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.