இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக ஏன் பேரவையில் முதல்வர் விஜய் ஆவேசமாகப் பேசினார்.

"Police should not be a power centre": CM Vijay amid uproar in Tamil Nadu Assembly over law and order

முதல்வர் விஜய்

Published On :7 செப்டம்பர் 2026, 10:42 am IST

பேசிப் பழகிய பொய், வாங்கிப் பழகிய கை, போட்டுப் பழகிய பை, இதுதான் திமுக. இவ்வளவுதான் திமுக என்று பேரவையில் பேசிய தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கூறியுள்ளார்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள், 18 நாள்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், செப். 3-ல் முதல்வர் விஜய்யின் பொறுப்பில் உள்ள காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.

இன்று அதற்கான பதிலுரையை முதல்வர் விஜய் பேரவையில் ஆற்றினார். அப்போது பேசிய அவர், தமிழக முதல்வர் பதவிக்காக நான் வரவில்லை. தமிழக மக்களுக்காகத்தான் வந்திருக்கிறேன், உண்மையில் அவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்த மட்டும்தான் வந்திருக்கிறேன்.

கவிஞர் கண்ணதாசன் திமுகவைப் பற்றி மிக அழகாகச் சொல்லியிருப்பது என்ன தெரியுமா? பேசிப் பழகிய பொய், வாங்கிப் பழகிய கை, போட்டுப் பழகிய பை, இதுதான் திமுக. இவ்வளவுதான் திமுக. ஒன்றுதான் இங்கு சொல்ல வேண்டும், நம்முடைய அரசு, தனிப்பட்ட அடையாளமாக இருக்காது. நம்முடைய அரசின் அடையாளம் தமிழ், தமிழர், தமிழ்நாடு. தமிழ்நாட்டின் 8 கோடி பேரும் என் சொந்தங்கள். அவர்களுக்கான அடையாளமாகவே தமிழக அரசு செயல்படும்.

கடந்த வாரம் பேசும்போது, எனது மேஜையில் மூன்று கோப்புகள் உள்ளன, அதை எப்போது திறக்க வேண்டுமோ அப்போது திறப்பேன் என்று கூறினேன். அதற்கு ஒரு சாம்பிள் சொல்லட்டுமா? போன திமுக அரசுக்கு அமலாக்கத் துறை அனுப்பிய ஆவணங்களில், சர்காரியா ஆணையத்தில் வீராணம் ஏரி ஒப்பந்தம் வழங்கியதில் நடந்த முறைகேடு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் வழங்க 2.5 சதவீத கமிஷன் தர வேண்டும் என்று மாறன் கேட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண் காவல் ஆய்வாளரை தாக்கிய திமுக பிரமுகர் - மனைவி கைது செய்யப்படவில்லை. பல்லாவரம் திமுக முன்னாள் எம்எல்ஏ கருணாநிதி வீட்டில் பணிப்பெண்ணுக்கு கொடுமை நடந்துள்ளது. திமுகவினர் மீதான புகார்களில் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் கால தாமதம் நடந்துள்ளது. திமுக ஆட்சியில் முதல் தகவல் அறிக்கை பதிவில் தாமதம் ஏற்பட்டிருப்பதற்கு உயர் நீதிமன்றமே கண்டித்திருக்கிறது என்றும் முதல்வர் விஜய் கூறினார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், கால தாமதம் செய்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை வழக்கிலும் முதல் தகவல்அறிக்கை பதிவு செய்ய கால தாமதம் நடந்துள்ளது என்று முதல்வர் விஜய் பட்டியலிட்டார்.

Summary

This is the DMK; this is all there is to the DMK CM Vijay spoke in the Assembly!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.