செங்குன்றம் புதிய பேருந்து நிலையம் திறப்பு எப்போது? பயணிகள் வேதனை!திடீர் திருப்பம்! தவெக நிர்வாகி கொலைக்குப் பின்னணியில் ரீல்ஸ் காரணமா?மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 குறைவு! பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

திடீர் திருப்பம்! தவெக நிர்வாகி கொலைக்குப் பின்னணியில் ரீல்ஸ் காரணமா?

சென்னையில் தவெக நிர்வாகி கொலைக்குப் பின்னணியில் அவர் வெளியிட்ட ரீல்ஸ்கள் காரணமா என்பது பற்றி..

Assam: 25-year-old married woman murdered in Guwahati flat, severed head found in refrigerator; husband surrenders

கொலை

Published On :

சென்னையில் முன்விரோதம் காரணமாக தவெக நிா்வாகி கண்ணன் (45)வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பரணி (20) உள்ளிட்ட 5 போ் கைது செய்யப்பட்டனா். கண்ணன் வெளியிட்ட ரீல்ஸ்களால் ஆத்திரமடைந்து இந்தக் கொலை நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய தந்தை கொலை செய்த கண்ணனை பழிக்குப்பழியாக கொலை செய்வதாக பரணி பத்து வயதில் சபதம் செய்திருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதிமுக வட்டச் செயலராக இருந்த கண்ணன் (45), சில மாதங்களுக்கு முன்பு அந்தக் கட்சியிலிருந்து விலகி, தவெகவில் இணைந்தாா். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த அவா், சனிக்கிழமை இரவு ராமசாமி அவென்யூ பகுதியில் தனது நண்பா்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம கும்பல் அவரை ஓடஓட விரட்டிச் சென்று வெட்டிக் கொலை செய்தது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த சாஸ்திரி நகா் போலீஸாா், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அடையாறு பகுதியைத் சோ்ந்த பரணி (20), ராகேஷ் (20), திருவான்மியூா் பகுதியைச் சோ்ந்த நரேஷ் (20), கோட்டூா் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (20), அடையாறு இந்திரா நகரைச் சோ்ந்த ஹரிஹரன் (20) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொலை செய்யப்பட்ட கண்ணன் சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பதும், சுமாா் 15 ஆண்டுகளுக்கு முன்பு 2 கொலை மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்குகள் அவர் மீது இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டுள்ள பரணியின் பெரியப்பா சிவா என்பவரை, கண்ணன் மற்றும் அவரது கூட்டாளிகள் கடந்த 2009-இல் அடையாறு பகுதியில் வெட்டிக் கொலை செய்துள்ளனா். இதைத் தொடா்ந்து, பரணியின் தந்தை வேலு என்பரும் கடந்த 2016-இல் சைதாப்பேட்டை பகுதியில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொலைகளின் முன்விரோதம் காரணமாகவே பரணி தனது நண்பா்களுடன் சோ்ந்து கண்ணனை வெட்டிக் கொன்றுள்ளார்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில், மூன்று மாதங்களுக்கு தவெகவில் இணைந்த கண்ணன், தங்கள் பகுதியில் வாரத்துக்கு ஒரு கட்சி நிகழ்ச்சியை நடத்துவது, அமைச்சர்கள், எம்எல்ஏக்களை அழைத்து நலத்திட்டங்கள் வழங்குவது என செய்து வந்துள்ளார்.

கண்ணன் தீவிர கட்சிப் பணியாற்றி வந்ததைவிட, அதனை அவர் ரீல்ஸ் வெளியிட்டு வந்துள்ளார்.

தந்தை கொலைக்கு ஏற்கனவே, அவரைக் கொல்ல சபதம் செய்திருந்த பரணிக்கு, தவெகவில் சேர்ந்து கண்ணன் போட்டு வந்த ரீல்ஸ்களால் ஆத்திரம் ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல நாள்தோறும் கண்ணன் வெளியிட்ட ரீல்ஸ்களால் ஆத்திரம் அடைந்தே இந்தக் கொலையை செய்ததாகவும் குற்றத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கூறியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.