மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! திமுக போட்டி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக போட்டி குறித்து விரைவில் அறிவிப்பு

அண்ணா அறிவாலயம்
தமிழகத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுவது குறித்து இன்னும் சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வீட்டில் நடைபெற்று வரும் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுவது என முடிவெடுக்கப்பட்டதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதுராந்தகம், தாராபுரம் இரண்டுமே தனித் தொகுதிகள் என்பதால், திமுக அதனை புறக்கணிக்கக் கூடாது என்று கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இடைத்தேர்தலில் திமுக போட்டியிட்டே ஆக வேண்டும் என்று கனிமொழி உள்ளிட்டோர் வலியுறுத்திய நிலையில், திமுக போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்த முடிவை திமுக தலைமை இன்னும் சற்று நேரத்தில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடைத்தேர்தல் எப்போது?
தமிழகத்தில் உள்ள மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வேட்புமனு தாக்கல் தொடங்கும் நாள் - செப். 9
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் - செப். 16
வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள் - செப். 19
அக். 9 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அக். 11 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



