
மகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்
மகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.

மெலிண்டாவுடன் பில் கேட்ஸ்
மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் மறைவுக்குப் பிறகு அவரது சொத்தில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான பங்குகளே பிள்ளைகளுக்கு சேரும் வகையில் நடைமுறைகளை அமைத்திருக்கிறார். இதையே மெலின்டா கேட்ஸ் பின்பற்றியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தங்களது பிள்ளைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இந்த விவகாரத்தில் ஏன் இப்படி ஒரு நடைமுறையை இருவரும் கையாள்கிறார்கள் என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
போபி கேட்ஸின் நிறுவனத்துக்கு தன்னால் முழு நிதியையும் அளிக்க முடிந்தாலும், அதனை தான் செய்ய வில்லை. மாறாக, தன்னுடைய மகள் எவ்வாறு நிதியை திரட்டுகிறார் என்று ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தேன் என்கிறார் மெலின்டா கேட்ஸ்.
தன்னுடைய பெயரை பயன்படுத்தியோ, என்னுடன் தொடர்பில் இருப்பவர்களிடமிருந்தோ அவர் நிதி பெறுவதையோ, நான் நிறுவனத்துக்கு நிதி கொடுப்பதையோ செய்யவில்லை. மாறாக அவர் சுயமாக நிதி திரட்டுவதற்கான திறமையை கொண்டிருக்கிறாரா என்பதையே கவனித்தேன் என்கிறார்.
இதற்குக் காரணம் வெகு எளிமையானது, இந்த புத்தாக்க நிறுவனம், உண்மையான வணிக நிறுவனமாக இருந்தால், முதலீட்டாளர்கள், அதனை நம்பி அதில் முதலீடு செய்ய வேண்டும். செய்வார்கள் என்று நான் கருதினேன். அதனால்தான் என் மகளின் நிறுவனத்துக்கு நிதி கொடுக்கவில்லை என்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






