ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

கந்தர் அநுபூதியில் வாழ்வியல் காட்சிகள்

அருணகிரிநாதர் அருளிச்செய்த கந்தர் அநுபூதி என்னும் அருந் தமிழ்ப் பனுவல் பக்தியுடன் வாழ்வியல் அறங்களை பேசுகிறது.

அருணகிரிநாதர்

Published On :

அருணகிரிநாதர் அருளிச்செய்த கந்தர் அநுபூதி என்னும் அருந் தமிழ்ப் பனுவல் பக்தியுடன் வாழ்வியல் அறங்களை பேசுகிறது.

ஆசையே அழிவுக்குக் காரணம். 'ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்' என்கிறார் திருமூலர். மூன்று வகையான ஆசைகள் உள்ளதாக அருணகிரியார் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

'மூவேடணையென்று முடிந்திடுமோ ?' ( க.அ. -39). இதில் ஏடணை என்பதன் பொருள் விருப்பம், ஆசை. மூன்று விருப்பங்களாவன: அர்த்

தேடணை (பொருள் மீதுள்ள ஆசை),

புத்திரேடணை (புதல்வர், மக்கள் மீதுள்ள ஆசை), உலோகேடணை (பூமி, மண் மீதுள்ள விருப்பம்). இத்தகைய ஆசைகளை ஆறுமுகனாகிய இறைவன் ஒழித்

தருள வேண்டும் என வேண்டுகிறார்.

ஆசை ஒழியில் பிறப்பு ஒழியும். பிறப்பு ஒழியில் துன்பம் ஒழியும். இதனையே திருவள்ளுவர், 'அவா இல்லார்க்கு இல்லாகும் துன்பம்' என்கிறார். பேராசை என்னும் பிணி அகல வேண்டும் என்பதை அழகாக வேண்டுகிறார்.

பேரா சையெனும் பிணியிற் பிணிபட் / டோரா வினையேன் உழலத் தகுமோ? / வீரா! முதுசூர் படவேல் எறியும் / சூரா! சுரலோக துரந்தரனே!

(கந்தர் அநுபூதி 16)

சூரபன்மன் முருகப்பெருமானின் வேலால் அன்றி வேறு எவ்வகையிலும் அழியாமல் இருந்ததுபோல, தனது பேராசையும் முருகனின் திருவருள் மெய்ஞ்ஞானத்தால் அன்றி வேறு எவ்வகையிலும் ஒழியாமல் இருக்கின்றது என்கிறார். ஆகவே, ஆசைகளால் வரும் துன்பம் கொடியது. அதை அழித்தலே வாழ்வுக்கு இன்பம் என்பதை அழகுபட அருணகிரியார் அருளியுள்ளார்.

ஆசையைப் போலவே வறுமையும் கொடியது. வறுமையால் பீடிக்கப்பட்டவர் எவற்றையெல்லாம் இழப்பர்? என்பதை,

வடிவும் தனமும் மனமும் குணமும் / குடியும் குலமும் குடிபோ கியவா / அடிஅந்தம் இலா அயில் வேல் அரசே / மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே

(கந்தர் அநுபூதி 19)

வறுமையால் சிக்குண்டவனது வடிவு, தனம், மனம், குணம், குடி, குலம் என்னும் ஆறும் அவனை விட்டு ஓடிப்போகும்.

இன்மை என ஒரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும் என்கிறார் செந்நாப்போதார். அருணகிரியார் தம் திருப்புகழில் வறுமையின் கொடுமையினை விளக்கும் பாங்கு சிறப்புடையது.

மனித வாழ்க்கை நிலையாமையை, 'குடங் கவிழ் நீரோட்ட மென்றிரு' என்றார் பட்டினத்தடிகள். வாழ்வைச் சிறப்புற வாழ பேராசையை கைவிட வேண்டும் என்று பல இலக்கியங்கள் கூறியிருப்பினும் அருணகிரியார் சொன்னது அழகானதே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.