
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இடதுசாரி வேட்பாளர்கள் அறிவிப்பு!
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் சிபிஎம், சிபிஐ கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து...

சிபிஐ வீரபாண்டியன், சிபிஎம் சண்முகம் - எக்ஸ்
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் இடதுசாரி கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாராபுரம் தொகுதியில் லட்சுமணன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர், தாராபுரம் தாலுகா செயலாளர் பொறுப்பில் உள்ளார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுராந்தகத்தில், வேட்பாளராக சுகந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் பெண் உரிமைகளுக்காகப் போராடி வருபவர் சுகந்தி.
மதுராந்தகம் (தனி) சிபிஐ(எம்) வேட்பாளர் பி. சுகந்தி பற்றிய விபரங்கள்
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு - அயன் ரெட்டியப்பட்டியில் பிறந்தவர். இவருக்கு வயது 58. இவரது தந்தை அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர், தாய் அரசுப் பள்ளி ஆசிரியை.
இவர் விருதுநகர் வி.வி.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரியில் M.A., சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் B.Ed., பயின்றவர்.
சமூக செயற்பாட்டாளர்
அரசு உதவி பெறும் பள்ளி விடுதி ஒன்றில் முதலில் பணியாற்றியவர். பின்னர் அப்பணியிலிருந்து விடுவித்துக் கொண்டு 1990 ஆம் ஆண்டு அரசு துவங்கிய அறிவொளி இயக்கத்தில் தொண்டராக, கருத்தாளராக மாவட்ட ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டவர்.
இளம் வயதில் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்த ஏழை எளிய மக்களுக்கு எழுத்தறிவை கற்றுக் கொடுத்த பணியின் மூலம் பொது வாழ்விற்கு வந்தவர்.
1991 இல் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தில் இணைந்தார். 1991ல் கட்சி உறுப்பினராக இணைந்து ஜனநாயக மாதர் சங்கத்தில் விருதுநகர் மாவட்டச் செயலாளராகவும், 2011 ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில பொதுச் செயலாளராகவும் செயல்பட்டவர்.
தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.
2025 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளராக செயலாற்றி வருபவர்.
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பிற்காக....
தமிழகம் முழுவதிலும் எண்ணற்ற பெண்கள் குழந்தைகள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி பாதுகாப்பை உறுதி செய்யவும், நீதி கிடைக்கவும் பாடுபட்டு வந்திருப்பவர்.
அருப்புக்கோட்டையில் 1995 ஆம் ஆண்டு பள்ளிக்குச் சென்ற மாணவி கொடூரமாக கூட்டு பாலியல் வன்முறை பிரச்சனை.
காரைக்காலில் 2012ஆம் ஆண்டு அமில வீச்சுக்கு ஆளான பொறியியல் பட்டதாரியான வினோதினி சிகிச்சைக்கு நிதி உதவி - சட்டப் போராட்டம்.
2013 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இரண்டு குழந்தைகள் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கொடூரம்.
2013 ஆம் ஆண்டு செங்கல்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் இரண்டு மாணவிகள் ஆசிரியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு,
உள்ளிட்ட பிரச்சனைகளில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைப்பதற்கான போராட்டத்தை ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக முன்னெடுத்து நீதியும் பெற்றுத் தந்தவர்.
சமூகத்தில் பல்வேறு பிரிவு மக்களுக்கான கோரிக்கைகளுக்காக பல போராட்டக் களங்களைக் கண்டவர்.
இவரது இணையர் தோழர் கே.சாமுவேல்ராஜ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். இருவரும் முழுநேரமாக மக்கள் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள். இவர்களுக்கு சிந்தியா, சுபாஷினி என இரண்டு மகள்கள் உள்ளனர்.
Summary
Maduranthakam and Dharapuram by-elections: Left-wing candidates announced
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






