தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு தொடக்கம்!தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா! முதல்வர் விஜய் புகழாரம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 குறைந்தது!வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை அறிக்கைஇன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

ஊழல், குடும்ப அரசியலுக்கு எதிராக வாழ்ந்தவர் அண்ணா: அண்ணாமலை

ஊழலுக்கும், குடும்ப அரசியலுக்கும் எதிராக வாழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா என அண்ணாமலை தெரிவித்துள்ளது குறித்து...

'We The Leaders' movement founder K Annamalai

'வி தி லீடர்ஸ்' இயக்கத்தின் நிறுவனர் கே. அண்ணாமலை - எக்ஸ்

Published On :

ஊழலுக்கும், குடும்ப அரசியலுக்கும் எதிராக வாழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா என ‘வீ தி லீடர்ஸ்’ இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை செவ்வாய்க்கிழமை (செப். 15) தெரிவித்துள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

திமுக நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான மறைந்த பேரறிஞர் சி.என். அண்ணாதுரையின் பிறந்த நாள் இன்று.

மதுவிலக்குக் கொள்கையில் உறுதியாக நின்றவர். ஊழலுக்கும், குடும்ப அரசியலுக்கும் எதிராக வாழ்ந்தவர். எளிமையையும் நேர்மையையும் தனது அரசியல் வாழ்வில் கடைப்பிடித்தவர்.

தமிழகம் கண்ட எளிமையான தலைவர்களில் ஒருவரான பேரறிஞர் அண்ணாதுரையின் நினைவைப் போற்றி வணங்குகிறோம் என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

Summary

Annamalai, leader of the ‘We the Leaders’ movement, stated on Tuesday (Sept. 15) that Perarignar Anna lived in opposition to corruption and dynastic politics.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.