தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு தொடக்கம்!தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா! முதல்வர் விஜய் புகழாரம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 குறைந்தது!வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை அறிக்கைஇன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!

லண்டனில் முதல்வர் விஜய் மேற்கொண்ட தொழில்துறை முதலீட்டு ஒப்பந்த விவரங்கள் குறித்து...

₹15,300 crore investment! Jobs for 10,000 people! CM Vijay signs agreement in London!

லண்டனில் தொழில் முதலீடுகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானபோது... - எக்ஸ்

Published On :

முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் லண்டன் பயணத்தின் மூலம் ரூ.15,300 கோடிக்கும் அதிகமான முதலீடு முன்மொழிவுகள் மற்றும் உறுதிமொழிகள் மூலம் மாநிலத்தில் 10,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்குவேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என தமிழக அரசு இன்று (செப். 15) அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் முன்னிலையில் 14.9.2026 அன்று இங்கிலாந்து, லண்டனில், தமிழ்நாடு அரசின் முதலீட்டு மேம்பாட்டு முகமையான வழிகாட்டி (Guidance TamilNadu) நிறுவனத்திற்கும், முன்னணி உலகளாவிய நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

உலகளாவிய வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம், இந்தியாவில் தனது முதல் புதிய உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டில் நிறுவுவதற்கான விருப்பக் கடிதத்தை வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் ஹிந்துஜா குழும முதலீடுகளின் தற்போதைய முன்னேற்ற நிலை குறித்து அக்குழுமத்தினர் தமிழ்நாடு முதலமைச்சர் சந்தித்து விளக்கிக் கூறினர்.

வாகன உதிரிபாக உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் மின்கட்டமைப்பு உபகரணங்கள் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், நோக்கக் கடிதமும் சேர்ந்து ரூ.15,300 கோடிக்கும் அதிகமான முதலீடுகளைக் கொண்டிருப்பதோடு, தமிழ்நாட்டில் 10,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வடிவமைப்பு,

பொறியியல், உற்பத்தி, ஒருங்கிணைப்பு மற்றும் தளவாடங்கள் (D.E.M.A.L.) சார்ந்த வசதிகளை நிறுவுவதன்மூலம் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், மதர்சன் குழுமம் சுமார் ரூ.11,000 கோடி மதிப்பிலான புதிய முதலீட்டு வாய்ப்புகள் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 7,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது.

வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்துடன் புரிந்தணர்வு ஒப்பந்தம்

பிரிட்டனைத் (UK) தலைமையிடமாகக் கொண்ட, திறன்மிக்க மின்மாற்றிகளைத் தயாரிக்கும் வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனம், திருவள்ளூர் மாவட்டத்தில் தனது மின்மாற்றி உற்பத்திப் பணிகளின் அடுத்தகட்டத்திற்காக ரூ.300 கோடி முதலீடு செய்யவுள்ளது. இதன்மூலம் 400 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இந்த ஆலை, மேம்பட்ட மின் மற்றும் விநியோக மின்மாற்றி உற்பத்தியில் தமிழ்நாட்டின் உற்பத்தித் திறன்களை மேம்படுத்துவதோடு, உள்ளூர் மதிப்புக் கூட்டலையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை அமைத்திட ஸ்வீடனின் சிக்மா டெக்னாலஜி குழுமம் மற்றும் எர்ன்ஸ்ட் & யங் (Ernst & Young) நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஐரோப்பாவின் முன்னணி வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்று, இந்தியாவில், தான் மேற்கொள்ளவிருக்கும் ரூ.3,000 கோடி முதலீட்டிற்கு தமிழ்நாட்டையே விரும்பத்தக்க இடமாகக் கருதுவதாகத் தனது விருப்பத்தைத் தெரிவித்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில், தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரிடம் தனது விருப்பக் கடிதத்தை சமர்ப்பித்தது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

₹15,300 crore investment! Jobs for 10,000 people! CM Vijay signs agreement in London!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.