தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!

தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்காக ரூ. 300 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது குறித்து...

An agreement entered into in the presence of the Chief Minister.

முதல்வர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம். - படம் - எக்ஸ்

Published On :

தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்காக ரூ. 300 கோடி முதலீடு திங்கள்கிழமை (செப். 14) ஈர்க்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டுக்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்வர் விஜய் வியாழக்கிழமை (செப்.10) இரவு 10 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்டுச் சென்றார்.

அங்கு, நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தைத் தொடங்கி வைத்த முதல்வர் விஜய் பார்வையாளராகவும் போட்டியைக் கண்டு களித்தார்.

இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பது குறித்து தொழிலதிபர்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை  மேற்கொண்டார்.

இதுதொடர்பாக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:

பிரிட்டன், லண்டன் நகரில் இன்று (செப். 14), தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறையின் அடுத்த கட்ட வளர்ச்சியாக, திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ. 300 கோடி முதலீடு செய்து 400 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் ‘வில்சன் பவர் சொல்யூஷன்ஸ்’ (Wilson Power Solutions) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் குழுமத் தொழில்நுட்ப இயக்குநர் ஹரி கிருஷ்ணா மலேபதி, குழும நிதியியல் இயக்குநர் டென்னிஸ் சோர்பி ஆகியோரும், தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப் ஆகியோரால் கையெழுதிடப்பட்டு, ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், பிரிட்டன் நாட்டிற்கான இந்திய தூதர் குமரன் பெரியசாமி, நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர் என்று முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Investments worth ₹300 crore were attracted on Monday (Sept. 14) for the growth of the electronics manufacturing sector in Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER