தொழில் துறை அமைச்சரின்றி முதல்வர் விஜய் லண்டன் பயணம்: நயினார் நாகேந்திரன் கேள்வி!தொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

தருமபுரியில் மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி பற்றி....

TVK rule in Tamil Nadu came about purely by accident: Edappadi Palaniswami

எடப்பாடி பழனிசாமி

Published On :

தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தருமபுரியில் மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதுதான் இந்த ஆட்சியின் லட்சணம். சட்டபேரவையில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் தங்களின் சொந்த பிரச்னையைத்தான் பேசுகின்றன.

மக்களின் பிரச்னையை பேசுகின்ற ஒரேகட்சி அதிமுக மட்டும்தான். இன்னைக்கு ஏதோ விபத்தில் தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களின் பிரச்னைக்கு குரல் கொடுக்கும் கட்சி அதிமுக. இந்த ஆட்சியால் மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கப்போவதில்லை.

இந்த ஆட்சியால் கடன்தான் அதிகரிக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் வலிமையான இயக்கம் என்றால் அது அதிமுகதான். அதிமுக ஆட்சியில் விவசாயத்திற்கு 24 மணிநேரமும் மின்சாரம் வழங்கப்பட்டது என்று தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போதே மின்சாரம் தடைபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

AIADMK General Secretary Edappadi K. Palaniswami stated that the TVK government came to power in Tamil Nadu purely by accident.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.