
எண்ணூரில் மீன்கள் செத்து மிதப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: இபிஎஸ்
சட்டப்பேரவையில் அதிமுக கவன ஈர்ப்புத் தீர்மானம் குறித்து...
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி - Youtube
தமிழக சட்டப்பேரவையில் எண்ணூர் முகத்துவாரத்தில் மீன்கள் இறப்பு விவகாரம் குறித்து அதிமுக கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் ஈடுபட்டது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று நீதி, சிறை மற்றும் சட்டத்துறை, எரிசக்தித் துறை, இந்து சமய அறநிலையத் துறைகளில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இன்றைய சட்டப்பேரவையில் எண்ணூர் முகத்துவாரத்தில் கடந்த வாரம் மீன்கள் இறந்த விவகாரம் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, சென்னை எண்ணூர் முகத்துவார பகுதியில் கடந்த வாரத்தில் கொத்து கொத்தாக லட்சக்கணக்கில் மீன்கள் செத்து மிதந்தன. இப்பகுதியில் உள்ள நெட்டுக்குப்பம், தாளக்குப்பம், காட்டுக்குப்பம் உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள், மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில், லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் உள்ள தொழிற்சாலைக் கழிவுகள் கொசஸ்தலை ஆற்றில் கலப்பதால், நீரும் அடிக்கடி மஞ்சள் நிறமாக மாறுகிறது. இதுகுறித்து மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரி முறையாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
முகத்துவார பகுதியில் ரசாயனக் கழிவுகள் கலப்பதாக பசுமைத் தீர்ப்பாயம் எச்சரித்தபோதிலும், கழிவுகள் ஆற்றில் கலப்பதாகப் புகார்கள் வந்துள்ளன.
இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக அப்பகுதி மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகையால், இந்த விவகாரத்தில் அரசு உடனடியாகத் தலையிட்டு, மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவனத்தை ஈர்க்கிறேன் என்று தெரிவித்தார்.
Summary
AIADMK's call-attention motion in the Tamil Nadu Legislative Assembly
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





