தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் புதன்கிழமை காலை வெளிநடப்பு செய்தனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீர்வளம், ஊரக வளர்ச்சி மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது.
இதனிடையே, வண்டல் மண் எடுக்கும் விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க அதிமுக கவன ஈர்ப்புத் தீர்மானம் தாக்கல் செய்திருந்தது.
ஆனால், அந்த தீர்மானம் குறித்து ஆராய்ந்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்த பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், உடனடியாக விவாதிக்க மறுத்துவிட்டார்.
இந்த நிலையில், தீர்மானம் வழங்கப்பட்டு 5 நாள்கள் ஆகியும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
இதுதொடர்பாக பேரவையில் பேசிய ஜே.சி.டி. பிரபாகர், “காலம் கருதி எந்த தீர்மானத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நான் தான் முடிவு செய்வேன். அதிமுக கொண்டுவந்த தீர்மானம் அரசு தரப்புக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து பதில் வந்த பிறகு நாளை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.
Summary
AIADMK stages a walkout from the Tamil Nadu Legislative Assembly
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விளையாட்டின் தலைநகராக தமிழ்நாடு வரவேண்டும்: ஆதவ் அர்ஜுனா

சொந்தமாக வீடு, மனை வாங்க வாய்ப்பு! தமிழக அரசு அறிவிப்பு!
தமிழக மக்களுக்காக அவமானப்படவும் தயார்! பெங்களூர் பயணம் குறித்து விஜய்!
தமிழ்நாடு பட்ஜெட் 2026! முதல்முறையாக தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்!
விடியோக்கள்




