விசிக எம்.எல்.ஏ. ஜோதிமணியின் கோரிக்கையை ஏற்று எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு சார்பில் கார், உதவியாளர் வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு பட்ஜெட் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த ஆக. 5-ஆம் தேதி தொடங்கியது. கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி பேசிய விசிக காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ. ஜோதிமணி, 280 கி.மீ தொலைவில் இருந்து சட்டப்பேரவைக்கு வருவதாகவும், தன்னிடம் வாகன வசதி இல்லை என்றும், உதவியாளரை வைத்து ஊதியம் கொடுக்கும் அளவுக்கு பணம் இல்லை” என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து, காலணி அணியாத எம்.எல்.ஏ-க்கள் இருப்பதாகவும், ஊழல் இல்லாத அரசு அமையவும், எம்.எல்.ஏ.க்களுக்கு உதவிடும் வகையிலும் வாகன வசதி செய்து தர வேண்டும் என முதல்வர் விஜய்யிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
அப்போது பேசிய பேரவைத் தலைவர் ஜேடிசி பிரபாகர், முதல்வரின் கரங்கள் அள்ளிக் கொடுக்கும் கரங்கள் எனப் புகாரம் தெரிவித்ததுடன், முதல்வர் விஜய் உரிய நடவடிக்கை எடுப்பார் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், விதி எண் 110-ன்கீழ் முதல்வர் விஜய் இன்று காலை (ஆக. 19) சட்டப்பேரவையில் பேசினார்.
அவர் பேசுகையில், “அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கப்படும். வாகன ஓட்டுநர், எரிபொருள், வாகன பராமரிப்புக்கு மாதந்தோறும் ரூ.75,000 வாகனப்படியாக வழங்கப்படும்.
அதோடு மட்டுமின்றி சட்டப்பேரவை உறுப்பினர்களின் பொருளாதார சுமையைக் குறைத்து, கடைக்கோடி மக்களுக்கு லஞ்ச லாவண்யமற்ற நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை அளிக்கவும் உதவும்.
எம்.எல்.ஏக்கள் தங்களது தொகுதி சார்ந்த பல்வேறு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக ஒரு உதவியாளரை நியமித்துக் கொள்வது அவசியமெனக் கருதப்படுகிறது. எனவே, உறுப்பினர்களுக்கு அரசு வாங்கி வழங்கும் வாகனத்தைப் பராமரிக்கும் விதமாக வாகனத்திற்கு ஓட்டுநர், எரிபொருள், வாகனப் பராமரிப்பு உள்ளிட்ட செலவினங்களுக்காக மாதந்தோறும் ரூ. 75,000 வாகனப்படியாகவும், அலுவலகப் பணிகளில் உதவி செய்ய ஓர் உதவியாளரை நியமித்துக் கொள்ள மாதந்தோறும் ரூ. 25,000 உதவியாளர் படியாகவும் வழங்கப்படும்.
இதற்காக உரியச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொண்டு ஆணைகள் வெளியிடப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் தெரிவித்தார்.
முதல்வர் விஜய்யின் அறிவிப்பைத் தொடர்ந்து அவருக்கு விசிக எம்.எல்.ஏ. ஜோதிமணி நன்றி தெரிவித்த நிலையில், காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் தாரகை உள்ளிட்ட உறுப்பினர்கள் பலரும் நன்றி தெரிவித்தனர்.
Summary
Chief Minister Vijay has announced that cars and assistants will be provided to MLAs by the government, acceding to the request made by VCK MLA Jothimani.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
முதல்வரின் மருத்துவ காப்பீடு: ரூ. 5 லட்சத்திலிருந்து ரூ. 25 லட்சம் ஆக உயர்வு! - முதல்வர் விஜய்
பயிர்க்கடன் தள்ளுபடி! புதிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் விஜய்!

எம்எல்ஏக்களுக்கு கார் வழங்க முதல்வர் விஜய் திட்டம்!
தொகுதி மறுசீரமைப்பு - நாளை தமிழக எம்.பி.க்கள் கூட்டம்: முதல்வா் விஜய் அழைப்பு
விடியோக்கள்



