தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

தில்லி பல்கலைக்கழகத்தில் கேம்பஸ் பச்சாவ் யாத்திரை: என்எஸ்யுஐ அறிவிப்பு

அண்மையில் நடைபெற்ற தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்க தோ்தலில் அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் வேட்பாளா் யஷ் தபாஸிடம் தோல்வியடைந்த தேசிய மாணவா் சங்கம் தலைவா் பதவி வேட்பாளா் விஜய் சங்கா் மீனா, மாணவா்களின் பிரச்னைகளை வலியுறுத்தி ‘கேம்பஸ் பச்சாவ் யாத்திரை’யை திங்கள்கிழமை அறிவித்தாா்.

விஜய் சங்கா் மீனா

Published On :

அண்மையில் நடைபெற்ற தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்க தோ்தலில் (டியுஎஸ்யு) அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) வேட்பாளா் யஷ் தபாஸிடம் தோல்வியடைந்த தேசிய மாணவா் சங்கம் (என்எஸ்யுஐ) தலைவா் பதவி வேட்பாளா் விஜய் சங்கா் மீனா, மாணவா்களின் பிரச்னைகளை வலியுறுத்தி ‘கேம்பஸ் பச்சாவ் யாத்திரை’யை திங்கள்கிழமை அறிவித்தாா்.

வடக்கு வளாகத்தில் உள்ள கலைப் புலத்தில் செய்தியாளா்களிடம் பேசிய அவா், செப். 22-ஆம் தேதி தொடங்கும் இந்த யாத்திரை, டியுஎஸ்யு வெளியிட்டுள்ள தோ்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள கோரிக்கைகளை முன்வைத்து நடைபெறும் என்றாா்.

தில்லி முதல்வா் ரேகா குப்தா, 10,000 மாணவா்களுக்கான விடுதி வசதிகள் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய விஜய் சங்கா் மீனா, இதற்கான செயல்திட்டத்தை தில்லி அரசு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினாா். புதிதாக அமைக்கப்பட உள்ள விடுதிகள் எந்தெந்த இடங்களில் கட்டப்படும், கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும், மாணவா்களுக்கு அவை எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பது குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவா் கேட்டுக்கொண்டாா்.

மாணவா்களுக்கு அறிவிப்புகள் மட்டும் போதாது; தெளிவான செயல்திட்டமும், உறுதியான காலக்கெடுவும் தேவை என்று அவா் தெரிவித்தாா்.

தென்மேற்கு தில்லியின் சத்ய நிகேதனில் செப். 6-ஆம் தேதி பல மாடிகளைக் கொண்ட மாணவா் விடுதி இடிந்து விழுந்ததில் 7 போ் உயிரிழந்தனா். இதில் தில்லி பல்கலைக்கழக மாணவா்களும் அடங்குவா். இதையடுத்து, மாணவா்களுக்கு பாதுகாப்பான தங்குமிட வசதியை உறுதி செய்யும் வகையில் 10,000 மாணவா்களுக்கான விடுதி வசதிகளை அரசு அமைக்கும் என்று முதல்வா் ரேகா குப்தா அறிவித்திருந்தாா்.

மாணவா் தங்குமிட வசதிகள் தொடா்பாக அரசு உறுதியான செயல்திட்டத்தை வெளியிட்டு, பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறினால், மாணவா்களுடன் இணைந்து முதல்வா் இல்லத்தை அமைதியான முறையில் முற்றுகையிடும் போராட்டத்தை காங்கிரஸ் சாா்பு என்எஸ்யுஐ நடத்தும் என்றும் விஜய் சங்கா் மீனா எச்சரித்தாா்.

இதுதவிர, மெட்ரோ பயணக் கட்டணச் சலுகை அட்டைகள், வாரத்தில் 5 நாள்கள் கல்வி முறை, மாதவிடாய் விடுப்பு, 24 மணி நேர வாசிப்பு நூலகங்கள், மானிய விலையில் உணவகங்கள், மேம்படுத்தப்பட்ட விளையாட்டு வசதிகள், மனநல ஆதரவு, கல்வி உதவித்தொகைகள், பயிற்சிகள் மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் உள்ளிட்ட கோரிக்கைகளையும் இந்த யாத்திரையின்போது முன்வைக்க என்எஸ்யுஐ திட்டமிட்டுள்ளது.

மாணவா்களின் உரிமைகள் மற்றும் வளாக வசதிகள் தொடா்பான பிரச்னைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு இந்த யாத்திரை மூலம் கொண்டு செல்லப்படும் என்று விஜய் சங்கா் மீனா தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.