தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்!
தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது குறித்து...
தவெக நட்சத்திரப் பேச்சாளர்கள் - X | Vaiko
தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய 2 தனித் தொகுதிகளுக்கும் வருகிற அக். 6 ஆம் தேதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. இதனிடையே, தவெக சார்பில் முதல்வர் விஜய் உள்பட காங்கிரஸ், விசிக, மதிமுக, ஐயுஎம்எல் ஆகிய கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்களும் தவெக நட்சத்திரப் பேச்சாளர்களின் பட்டியலில் இடம் பெற்றன.
இதைத் தொடர்ந்து, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 77-க்கு முரணாகப் பிற கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் இடம்பெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இந்த நிலையில், விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொகிதீன் போன்றோரின் பெயர்கள் தவெக நட்சத்திரப் பேச்சாளர்களின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
Summary
The names of alliance party leaders have been removed from the TVK's list of star speakers.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




