ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தடை விதிக்க தவெக அரசு முயல்கிறதா? - டிடிவி தினகரன்
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தடை விதிக்க தவெக அரசு முயல்கிறதா? என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளது குறித்து...

முதல்வர் விஜய் - டிடிவி தினகரன் - கோப்புப் படம்
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தடை விதிக்க தவெக அரசு முயல்கிறதா? என அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் சனிக்கிழமை (ஆக. 29) கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று பேசிய தவெக எம்எல்ஏ கருப்பையா, “இளைஞர் சமுதாயத்தை சீரழிக்க கூடிய ஒரு ஜல்லிக்கட்டு திடலுக்கு அவ்வளவு பணம் செலவழிப்பதற்கு பதிலாக, சர்க்கரை ஆலைக்கு கொடுத்து இருக்கலாம்” என்றார்.
ஜல்லிக்கட்டு குறித்த கருப்பையாவின் இந்தப் பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், இதற்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து டிடிவி தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
தமிழர்களின் பாரம்பரியத்தோடும், பண்பாட்டோடும் பின்னிப் பிணைந்த வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் இளைஞர் சமுதாயத்தைச் சீரழிக்கின்றன என்ற சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கருப்பையாவின் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
சட்டப்பேரவை உறுப்பினர்களைத் தக்கவைத்துக் கொள்ள மக்கள் வரிப் பணத்திலிருந்தே கார் வழங்கலாம் என்று முடிவெடுத்த தவெக, அதனை தனது இரு சட்டப்பேரவை உறுப்பினர்களை வைத்து எப்படி அவையில் முன் மொழிந்ததோ அதே போல ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு உலக அளவில் புகழ்பெற்ற அலங்காநல்லூரை உள்ளடக்கிய சோழவந்தான் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரை வைத்தே இத்தகைய இழிவான பேச்சைச் சட்டப்பேரவையில் பதிவு செய்திருப்பதன் மூலம், வருங்காலத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தடை விதிக்க தவெக அரசு முயல்கிறதா? என்ற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் எழுந்திருக்கிறது.
அலங்காநல்லூரில் தொடங்கி சென்னை மெரினா வரை, தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் வெகுண்டெழுந்து, ஒன்றுதிரண்டு நடத்திய போராட்டத்தின் விளைவாகப் பெற்ற நமது பாரம்பரிய உரிமையை கொச்சைப்படுத்தும் வகையிலான தவெக சட்டப்பேரவை உறுப்பினரின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படாமல் இருப்பதன் மூலம், இது முன்கூட்டியே திட்டமிட்ட செயலா? என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
தமிழர்களின் வீரம் மற்றும் பண்பாட்டின் அடையாளமாகவும், விவசாய வாழ்வியலின் அங்கமாகவும் திகழும் ஜல்லிக்கட்டு குறித்த சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரின் இழிவான பேச்சுதான் தவெகவின் நிலைப்பாடா? என்பதை அக்கட்சித் தலைமை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். எனவே, வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளையும், அதற்காகப் போராடிய மக்களின் உணர்வையும், பங்களிப்பையும் கொச்சைப்படுத்தும் வகையிலான தவெக சட்டப்பேரவை உறுப்பினரின் பேச்சை பேரவைத் தலைவர் அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதோடு, தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து, அப்பேச்சைத் திரும்பப் பெற வேண்டும் என தவெகவின் சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினரை வலியுறுத்துகிறேன் என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழரà¯à®à®³à®¿à®©à¯ பாரமà¯à®ªà®°à®¿à®¯à®¤à¯à®¤à¯à®à¯à®®à¯, பணà¯à®ªà®¾à®à¯à®à¯à®à¯à®®à¯ பினà¯à®©à®¿à®ªà¯ பிணà¯à®¨à¯à®¤ வà¯à®° விளà¯à®¯à®¾à®à¯à®à®¾à®© à®à®²à¯à®²à®¿à®à¯à®à®à¯à®à¯ பà¯à®à¯à®à®¿à®à®³à¯ à®à®³à¯à®à®°à¯ à®à®®à¯à®¤à®¾à®¯à®¤à¯à®¤à¯à®à¯ à®à¯à®°à®´à®¿à®à¯à®à®¿à®©à¯à®±à®© à®à®©à¯à®± à®à¯à®´à®µà®¨à¯à®¤à®¾à®©à¯ தà¯à®à¯à®¤à®¿ à®à®à¯à®à®®à®©à¯à®± à®à®±à¯à®ªà¯à®ªà®¿à®©à®°à¯ திரà¯. à®à®°à¯à®ªà¯à®ªà¯à®¯à®¾ à®à®µà®°à¯à®à®³à®¿à®©à¯ பà¯à®à¯à®à¯ à®à®à¯à®®à¯ à®à®£à¯à®à®©à®¤à¯à®¤à®¿à®±à¯à®à¯à®°à®¿à®¯à®¤à¯.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) August 29, 2026
à®à®à¯à®à®®à®©à¯à®± à®à®±à¯à®ªà¯à®ªà®¿à®©à®°à¯à®à®³à¯à®¤à¯ தà®à¯à®à®µà¯à®¤à¯à®¤à¯à®à¯â¦
Summary
AMMK General Secretary TTV Dhinakaran questioned on Saturday (Aug. 29) whether the TVK government is attempting to impose a ban on Jallikattu competitions.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






