தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனங்கள் கழகத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு முன் 2 முறை சரிபார்க்கவும்! ரிசர்வ் வங்கிதமிழகம் முழுவதும் 12,921 இடங்களை கண்காணிக்கும் ‘சிங்கப்பெண்’ படைஉஸ்பெகிஸ்தான், கிா்கிஸ்தானுக்கு பிரதமா் மோடி இன்று பயணம்: எஸ்இஓ உச்சிமாநாட்டில் பங்கேற்கிறாா்மத்திய இருப்பில் 30% வெங்காயம் அழுகிவிட்டதாக வெளியாகும் தகவல் தவறானது: மத்திய அரசுநேபாளத்தில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை: உயிரிழப்பு-579, மாயம்-2,000 போ் நேபாள பெருவெள்ளம் 320 இந்தியா்கள் மாயம்

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு முன் 2 முறை சரிபார்க்கவும்! ரிசர்வ் வங்கி

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு முன் 2 விவரங்களை 2 முறை சரிபார்க்கவும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை - Center-Center-Delhi

Published On :29 ஆகஸ்ட் 2026, 10:00 am IST

ஏதேனும் ஒரு டிஜிட்டல் பணப்பரிமாற்ற செயலி அல்லது வங்கியின் இணையதளம் மூலம் பணப்பரிமாற்றத்தை செய்வதற்கு முன் இரண்டு விவரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருக்கிறது.

பணப்பரிமாற்றம், வங்கிக் கணக்கு, சைபர் மோசடிகள் குறித்து ரிசர்வ் வங்கி மக்களுக்கு அவ்வப்போது அறிவுறுத்தல்களை மேற்கொண்டு வருகின்றன.

வாட்ஸ்ஆப் வழியாக பல்வேறு அறிவுறுத்தல்களை மேற்கொண்டு வரும் ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டிருக்கும் தகவலில் முக்கியமான ஒரு எச்சரிக்கையை கொடுத்துள்ளது.

டிஜிட்டல் முறையில் பேமென்ட் (digital payment) செய்கிறீர்களா?

ஒவ்வொரு முறை டிஜிட்டல் பேமென்ட் செய்வதற்கு முன்பும், கீழே உள்ளவற்றை இரண்டு முறை சரிபார்க்கவும்:

  • நீங்கள் பணம் அனுப்ப விரும்பும் நபரின் பெயர், அதாவது பயனாளியின் பெயர்

  • நீங்கள் பரிமாற்றம் செய்ய விரும்பும் தொகை

டிஜிட்டல் பேமென்ட் செய்துகொண்டே இருங்கள், ஆனால்... கொஞ்சம் கவனமாக!! இருங்கள் என்று தெளிவாகக் கூறியிருக்கிறது.

அதாவது, ரிசர்வ் வங்கி (RBI) சொல்கிறது, விவரமாக இருங்கள், விழிப்புடன் இருங்கள் என்று மக்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது.

ஏனெனில், தவறான நபருக்கோ, தவறான தொகையையே அனுப்பிவிட்டால் அதனை மீண்டும் பெறுவது அவ்வளவு எளிதல்ல. எனவே சரியாக மிக நிதானமாக இரண்டையும் சரிபார்த்துக் கொண்டு பணப்பரிமாற்றத்தை உறுதி செய்துகொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறது. நாமும் இதனை நிச்சயம் பின்பற்ற வேண்டும்.

Summary

Double-check before making digital transactions RBI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.