உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனங்கள் கழகத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனங்கள் கழகத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...

Staff Recruitment Notification

தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனங்கள் கழகத்தில் வேலை - TNUAVC

Published On :29 ஆகஸ்ட் 2026, 8:15 am IST

தமிழ்நாட்டில் ட்ரோன் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புத்தொழில்கள் மற்றும் புத்தாக்கத்திற்கான சூழல் அமைப்பை உருவாக்கவும், தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகன கழகத்தின் செயல்பாடுகளைச் சீராக மேற்கொள்ளவும் பின்வரும் ஒப்பந்தகால பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஓராண்டு கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து செப்டம்பர் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்தக் காலத்தில் திருப்திகரமான பணித்திறன் வெளிப்படுத்தப்படும் பட்சத்தில், தேவை மற்றும் தனிநபரின் பணித்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுவதற்கும் வாய்ப்புகள் உண்டு.

பணி மற்றும் காலியிடங்கள்:

மொத்த காலியிடங்கள்: 36

பணி: ட்ரோன் பைலட்

காலியிடங்கள்: 7

பணி: ட்ரோன் கோ பைலட்

காலியிடங்கள்: 7

பணி: ஆ.பி.டி.ஓ., சூப்பர் வைசர்

காலியிடங்கள்: 15

பணி: ஓட்டுநர்

காலியிடங்கள்: 1

தகுதி: பத்தாம் வகுப்பு, டிப்ளமோ, பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: ஒவ்வொரு பணிக்கும் வயதுவரம்பு மாறுபடுவதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் tnuavcorp.com இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி செய்து, தெளிவாக பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரில் சென்றோ சமர்ப்பிக்கலாம்; அல்லது விண்ணப்பத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட பிரதிகளை ceo@tnuavcorp.com / bdm@tnuavcorp.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

The Managing Director, Tamil Nadu Unmanned Aerial Vehicles Corporation, Employment Exchange Office, 42, Alandur Rd, Thiru Vi Ka Industrial Estate, SIDCO Industrial Estate, Guindy, Chennai - 600 032

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசிநாள்: 18.9.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு tnuavcorp.com அல்லது இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

TamilNadu Unmanned Aerial Vehicles Corporation (TNUAVC) is proposing to recruit the following staff members to develop an ecosystem for Drone based R&D, Start-Ups and Innovation in the State and smooth functioning of the TNUAVC.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.