இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ஐடிஐ, டிப்ளமோ, பட்டதாரிகளுக்கு தொழில் பழகுநர் பயிற்சி
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ஐடிஐ, டிப்ளமோ, பட்டதாரிகளுக்கு தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு குறித்து...

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் - கோப்புப் படம்
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாகவும் மற்றும் ஃபார்ச்சூன் “குளோபல் 500” நிறுவனவுமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், நாட்டின் திறன் மேம்பாட்டு முயற்சியின் ஒரு நடவடிக்கையாக, நாட்டில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் (தில்லி, ஹரியாணா, பஞ்சாப், சண்டிகர், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீர், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகாண்ட்) ஆகிய இடங்களில் 433 தொழில்நுட்ப வல்லுநர், பட்டதாரி மற்றும் வர்த்தகப் பயிற்சியாளர்களுக்கான (தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் அல்லாத) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 31 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண்.: IOCL/MKTG/NR/APPR/2026-27/1
பயிற்சியின் பெயர்: Trade Apprentice
காலியிடங்கள் ஏற்பட்டுள்ள டிரேடுகளின் விபரம்:
i. Fitter
ii. Electrician
iii. Machinist
iv. Instrument Mechanic
v. Electronic Mechanic
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Fitter, Mechanical,Electrician, Mechinist, Instrument மற்றும் Electronic Mechanic போன்ற ஏதாவதொரு டிரேடில் 2 ஆண்டு ஐடிஐ படிப்பை. முடித்திருக்க வேண்டும். ஐடிஐ படிப்பானது என்சிவிடி அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டும்.
பயிற்சியின் பெயர்: Trade Apprentice (Data Entry Operator-Freshers/Skilled)
தகுதி: Data Entry Operator (Fresher)-க்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், Data Entry Operator (Skilled)-க்கு பிளஸ் 2 தேர்ச்சியுடன் Data Entry Operator பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சியின் பெயர்: Technical Apprentice
காலியிடங்கள் ஏற்பட் டுள்ள பாடப்பிரிவுகளின் விப ரம் வருமாறு:
i. Mechanical
ii. Electrical
iii. Instrumentation
iv. Civil
v. Electronics
vi. Electrical & Electronics
தகுதி: சம்பந்தப்பட்ட என்ஜினியரிங் பாடப் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சியின் பெயர்: Graduate Apprentice (Secretarial Assistant)
தகுதி: பி.ஏ., பி.காம், பி.எஸ்சி, பிபிஏ போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சியின் பெயர்: Grauate Apprentice (Accountant)
தகுதி: பி.காம் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 31.8.2026 தேதியின்படி 18 முதல் 24-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி வரு பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு அரசு விதிமுறைப்படியும் வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.
உதவித்தொகை: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன விதிமுறைப்படி வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள், சான்றிதழ் சரிபார்த்தலின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். இது தொடர்பான விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: Trade Apprentice பயிற்சிக்கு www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், Technician Apprentice மற்றும் Graduate Apprentice பயிற்சிகளுக்கு www.nats.education.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின்பு www.iocl.com/apprenticeship இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.8.2026.
Summary
Applications are invited from candidates meeting the following qualification & other parameters for engagement of Apprentices under Apprentices Act...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




