விண்வெளித் துறையின் கீழ் இயங்கும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தொலை அளவீடு, கண்காணிப்பு மற்றும் கட்டளை வலையமைப்பு,1961-ஆம் ஆண்டு தொழிற்பயிற்சிச் சட்டம் மற்றும் அதன் திருத்தச் சட்டங்களின் கீழ், பின்வரும் பிரிவுகளில் ஓராண்டு கால தொழிற்பயிற்சிக்கு(அப்ரண்டிஸ்) விண்ணப்பங்களை வரவேற்கிறது. இதற்கு பொறியியல் துறையில் பி.இ, பி.டெக், டிப்ளமோ, வணிக பயிற்சி பாடப் பிரிவில் டிப்ளோமா மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் வரும் 31 ஆம் தேதிக்குள் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்த விவரங்கள்...
பயிற்சி அறிவிப்பு எண்: ISTRAC: 01:2026
பயிற்சியின் பெயர்: Graduate Apprentice
காலியிடங்கள்: 62
உதவித்தொகை : பயிற்சியின் போது மாதம் ரூ.12,300 உதவித்தொகையாக வழங்கப்படும்.
தகுதி: பயிற்சி வழங்கப்படும் பொறியியல் பாடப்பிரிவில் பிஇ பட்டம் பெற்றிருக்க வேண்டும். நூலக அறிவியல் பிரிவிற்கு ஏதாவதொரு இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் முதல் வகுப்பில் எம்.எல்.ஐ.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
பயிற்சியின் பெயர்: Diploma Apprentice
காலியிடங்கள்: 25
உதவித்தொகை : பயிற்சியின் போது மாதம் ரூ. 10,900 உதவித்தொகையாக வழங்கப்படும்.
தகுதி: பயிற்சி வழங்கப்படும் பொறியியல் பாடப்பிரிவில் பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். வணிக பயிற்சி பாடப் பிரிவிற்கு சம்மந்தப்பட்ட பாடத்தில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பயிற்சியின் பெயர்: Trade Apprentice
காலியிடங்கள்: 8
உதவித்தொகை : பயிற்சியின் போது மாதம் ரூ.9,600 உதவித்தொகையாக வழங்கப்படும்.
தகுதி: பயிற்சி அளிக்கப்படும் டிரேடுகள் ஏதாவதொன்றில் ஐடிஐ முடித்து என்சிவிடி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
ஏற்கெனவே அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள், அறிவிக்கப்பட்டுள்ள கல்வித் தகுதியைவிட கூடுதல் கல்வித் தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேற்கண்ட அனைத்து பயிற்சிகளுக்கும் 2024 ஆம் ஆண்டிற்குப் பிறகு படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். இதற்காக நேர்முகத் தேர்வு நடத்தப்படும். நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் மாதம் 27, 28 ஆம் தேதிகளில் லக்ணோவில் நடைபெறும். இரண்டாம் கட்டமாக செப்டம்பர் 3, 4 ஆம் தேதிகளில் ஸ்ரீ விஜயபுரத்தில் நடைபெறும். செப்டம்பர் 9, 11 தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: பட்டம், டிப்ளமோ முடித்தவர்கள் www.nats.education.gov.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் தங்களைப் பற்றிய விபரங்களை முன்பதிவு செய்து கொள்ளவும். ஐடிஐ முடித்தவர்கள் www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளத்திலும் முன்பதிவு செய்து பின்னர் www.isro.gov.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும். பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்களின் விபரம் இணையதளத்தில் வெளியிடப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.7.2026
பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் தேவையான அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
Recruitment to the posts of Graduate Apprentice Trainee,Diploma Apprentice Trainee,Diploma in Commercial Practice and Trade ITI.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விண்ணப்பிக்கலாம் வாங்க... அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் அட்டகாசமான வேலை வாய்ப்பு அறிவிப்பு!

கல்பாக்கம் அணுமின் கழகத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி: காலியிடங்கள்: 158

ஐடிஐ சோ்க்கைக்கான கலந்தாய்வு அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிப்பு

உதவித்தொகையுடன் ரயில்வேயில் தொழில்பழகுநர் பயிற்சி: ஐடிஐ படித்தவர்களுக்கு வாய்ப்பு!
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi




