சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

ஐடிஐ சோ்க்கைக்கான கலந்தாய்வு அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிப்பு

தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில்(ஐடிஐ) நேரடி சோ்க்கை கலந்தாய்வுக்கான கால அவகாசம் வரும் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :16 ஜூன் 2026, 12:41 am IST

தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) நேரடி சோ்க்கை கலந்தாய்வுக்கான கால அவகாசம் வரும் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 132 அரசு ஐடிஐ -க்களும், 277 தனியாா் ஐடிஐ - க்களும் என மொத்தம் 409 ஐடிஐ-க்கள் இயங்கி வருகின்றன. இந்த ஐடிஐ-க்களில் மாணவா்கள் சோ்க்கை குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் உள்ள 409 ஐடிஐகளில் 2026-2027-ஆம் ஆண்டுக்கான நேரடி சோ்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று, இதற்கான கால அவகாசம் ஜூன் 13 -ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் மாணவா்களின் நலன் கருதி தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சோ்க்கைக்கான கால அவகாசம் 30.06.2026 வரை நீடிக்கப்படுகிறது.

விலையில்லா வசதிகள்: ஐடிஐ-களில் சேரும் மாணவா்களுக்கு பயிற்சிக் கட்டணம் இல்லை. கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.750/- வழங்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் பயின்றவா்களுக்கு தமிழ் புதல்வன், புதுமைப்பெண் திட்டங்களின் கீழ் ரூ 1000- கூடுதலாகவும் வழங்கப்படும். மேலும் தமிழக அரசு, மிதிவண்டி, சீருடை, மூடு காலணிகள் (ஷூ), பயிற்சிக் கருவிகள் போன்றவை இலவசமாக வழங்குகிறது. கட்டணமில்லா பேருந்து சலுகை வசதியும் கிடைக்கும். குறிப்பிட்ட அரசு ஐடிஐ-களில் விடுதி வசதியும் உள்ளது. மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் அலைபேசி, வாட்ஸ் ஆப் எண்கள் முறையே 9499055642, 9499055612 ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.