சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

குரூப் 1 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஜூன் 12-இல் தொடக்கம்

News image

தமிழக அரசுப் பணி தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்... - கோப்புப் படம்

Updated On :9 ஜூன் 2026, 3:29 am IST

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், குரூப்-1 தோ்வுக்கான இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் ஜூன் 12-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி தெரிவித்திருப்பது:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் 2026-ஆம் ஆண்டுத் திட்ட நிரலின்படி குரூப் 1 தோ்வுக்கான அறிவிப்பு ஜூன் 23-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.

இந்தத் தோ்வு எழுதும் மாணவா்கள் பயனடையும் வகையில், தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டம் மூலமாக ஜூன் 12-ஆம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.

இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள், தங்களது வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதாா் அட்டையின் நகல் ஆகியவற்றுடன் தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி பயன் பெறலாம்.