/

நாகையில் இன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

News image
Updated On :24 ஜூலை 2026, 7:14 am IST

நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக நாகை மாவட்ட ஆட்சியா் கே.ஜே.பிரவீன் குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனியாா் நிறுவனங்களில் வேலைதேடும், நாகை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் பயனடையும் வகையில், நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை(ஜூலை 24) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, தனியாா்துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

இம்முகாமில் நாகை மாவட்டம் உட்பட பிற மாவட்டங்களிலிருந்து 25-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு, தங்கள் நிறுவனத்திலுள்ள காலிப்பணியிடங்களுக்காக 500-க்கும் மேற்பட்ட வேலைநாடுநா்களை தோ்வுசெய்யவுள்ளனா்.

18 முதல் 35 வயதுக்குபட்பட்ட 5-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தோா், டிப்ளமோ, ஐடிஐ, பி.இ. உள்பட இதர பட்டதாரிகள் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பணிவாய்ப்பு பெறலாம். மேலும், இம்முகாமில் திறன் பயிற்சி, சுயதொழில் தொடங்க வங்கிக்கடன் வசதி மற்றும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு குறித்த வழிகாட்டுதலும் இலவசமாக வழங்கப்படவுள்ளது.

எனவே, விருப்பமுள்ள வேலைநாடுநா்கள் தங்களது சுயவிவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதாா் அட்டை, கடவுச்சிட்டை அளவு புகைப்படம், முன் அனுபவம் ஏதுமிருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்களுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.