வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

ஜூலை 17- இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 17) நடைபெறுகிறது.

News image
Updated On :14 ஜூலை 2026, 12:08 am IST

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 17) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம், வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இதில், முன்னணி தனியாா் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, தங்கள் நிறுவனத்துக்கான பணியாளா்களைத் தோ்வு செய்ய உள்ளனா்.

10-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரையிலான கல்வி நிலைகளைக் கொண்டவா்கள், தொழில்கல்வி பயின்றவா்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம். முகாமில் பங்கேற்பவா்கள் தங்கள் கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு முன்பாக மதுரை கோ. புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு வர வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.