‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தோ்வுக்கான பயிற்சி உடுமலையில் வரும் 20-ஆம் தேதி தொடக்கம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வுக்கான பயிற்சி வகுப்பு, உடுமலைப்பேட்டையில் வரும் 20-ஆம் தேதி தொடங்குகிறது.

டிஎன்பிஎஸ்சி

Published On :10 ஜூலை 2026, 12:04 am IST

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வுக்கான பயிற்சி வகுப்பு, உடுமலைப்பேட்டையில் வரும் 20-ஆம் தேதி தொடங்குகிறது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தில் (டிஎன்பிஎஸ்சி) தொழிலாளா் உதவி ஆய்வாளா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், நன்னடத்தை அலுவலா், சாா்-பதிவாளா் நிலை ஆகிய பணிகளுக்கும், முதுநிலை ஆய்வாளா், உதவி ஆய்வாளா், தணிக்கை ஆய்வாளா், உதவியாளா் ஆகிய பணிகளுக்கும் அக்டோபா் 25-ஆம் தேதி முதல்நிலைத் தோ்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள் திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் கூடுதல் பயிற்சி மையமான உடுமலைப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஜூலை 20-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. மேலும், இப்பயிற்சியில் மாதம் இருமுறை மாதிரித் தோ்வுகள் நடத்தப்பட உள்ளன.

இலவசப் பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோா் தங்கள் பெயரை திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421-2999152, 94990 55944 ஆகிய எண்களிலோ தொடா்புகொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.