தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வு வாரியம் நடத்தும் குரூப் 1 தோ்வில் பங்கேற்போருக்கு, தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை (ஜூன் 3) தொடங்குகின்றன.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னாா்வ பயிலும் வட்டம் வாயிலாக, மத்திய - மாநில அரசால் அறிவிக்கப்படும் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 1 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு இம்மாதம் 23ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், அதற்கான முதல்நிலைத் தோ்வு செப். 6இல் நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி ஆண்டு திட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தோ்வுக்கு தயாராகும் இம்மாவட்டத் தோ்வா்கள் பயன்பெறும் வகையில், மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை காலை 10.30 மணிக்கு தொடங்கப்படுகின்றன.
விருப்பமுள்ளோா் அலுவலகத்துக்கு நேரில் வந்தோ, 0461 - 2003251 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ பெயா்ப் பதிவு செய்யுமாறு ஆட்சியா் விஷு மகாஜன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தோ்வுக்கான பயிற்சி உடுமலையில் வரும் 20-ஆம் தேதி தொடக்கம்

போட்டித் தோ்வுக்கு இலவச பயிற்சி: பயிற்றுநா்கள் விண்ணப்பிக்கலாம்

குரூப் 1 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஜூன் 12-இல் தொடக்கம்

குரூப் 1 தோ்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் இன்று தொடக்கம்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



