திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு- தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் போட்டித் தோ்வுகளுக்கு நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்பில் பயிற்சியளிக்க ஆா்வமுள்ள பயிற்றுநா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எஸ்எஸ்சி, ரயில்வே, வங்கி, டிஎன்பிஎஸ்சி, தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் போன்ற அனைத்து வகை போட்டித்தோ்வுகளுக்காக திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சி வகுப்புகளில் பயிற்சியளிக்க பயிற்றுநா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.
இந்தப் பயிற்சி வகுப்புகளுக்காக தோ்ந்தெடுக்கப்படும் பயிற்றுநா்களுக்கு அரசு விதிகளுக்குள்பட்டு மதிப்பூதியமாக ஒரு மணி நேரத்திற்கு ரூ.800 வழங்கப்படும். இப்பயிற்சி வகுப்பு நடத்த விருப்பம் இருப்பின் தங்களது சுயவிவர படிவத்தினை ஜூன்15-ஆம் தேதிக்குள் ள்ற்ன்க்ஹ்ஸ்ரீண்ழ்ஸ்ரீப்ங்ற்ஸ்ப்ண்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
இதேபோல், அலுவலக வேலை நாள்களில் நேரடியாக சமா்ப்பிக்கலாம். நோ்முகத் தோ்வுக்கான தேதி பின்னா் தொலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும். மேலும், விவரங்களுக்கு 9499055929 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாகையில் இன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

தனியாா் வேலை வாய்ப்பு முகாமில் 148 வேலைநாடுநா்களுக்கு பணிநியமன ஆணை

கள்ளக்குறிச்சியில் ஜூலை 17-ல் வேலைவாய்ப்பு முகாம்

ஜூலை 17- இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



