கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் மீது தாக்குதல்!

கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியது பற்றி...

News image

போராட்ட களத்தில் அபிஜீத் தீப்கே. - படம் - பிடிஐ

Updated On :15 ஜூன் 2026, 6:23 pm IST

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற போராட்டத்தின் போது, கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் திங்கள்கிழமை தாக்குதல் நடத்தினர்.

தலைமை நீதிபதி ஒருவரின் விமர்சனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டிஜிட்டல் கிரியேட்டர் அபிஜீத் தீப்கே என்பவரின் தலைமையில் தொடங்கப்பட்டது கரப்பான்பூச்சி மக்கள் கட்சி. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து போராட்டத்தை அறிவித்தனர்.

அதன்படி, கடந்த ஜூன் 6 ஆம் தேதி தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் அபிஜீத் தீப்கே தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 7,000 பேர் பங்கேற்றனர்.

இதையடுத்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும் என்று செய்தியாளர்களிடம் பேசிய அபிஜீத் தீப்கே தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து பெங்களூரு, புணே, லக்னௌ போன்ற நகரங்களிலும் போராட்டம் நடைபெற்ற நிலையில், இன்று ஜெய்ப்பூரில் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்று தங்களுடைய கோரிக்கைகளை விடுத்தனர்.

அபிஜீத் தீப்கேவை இளைஞர்கள் சிலர் தங்களுடைய தோள்களில் சுமந்து செல்லும்போது, அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென அவரைத் தாக்கினர். இதையடுத்து தாக்குதல் நடத்திய அந்த நபர்களை அபிஜீத் தீப்கேவின் ஆதரவாளர்கள் விரட்டி அடித்தனர்.

இந்த நிலையில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் போராட்டங்கள் அடுத்தடுத்த முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது குறிப்பிடடத்தக்கது.

Summary

Unidentified individuals attacked Abhijit Dipke, leader of the Karappanpoochi Makkal Katchi, on Monday during a protest held in Jaipur, Rajasthan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.