ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

ஜூன் 16-ல் மகாராஷ்டிரத்தில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் மீண்டும் போராட்டம்!

ஜூன் 16 ஆம் தேதி நாக்பூரில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்துவதாக அறிவிப்பு...

Cockroach janata party

ஜூன் 16 ஆம் தேதி நாக்பூரில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் போராட்டம்... - Instagram

Published On :

மகாராஷ்டிரத்தின் நாக்பூரில் வரும் ஜூன் 16 ஆம் தேதி கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.

சமூக ஊடகப் பக்கத்திலிருந்து இளைஞர்களின் பெரும் ஆதரவின் மூலம் மிகப் பெரிய இயக்கமாக உருவாகியுள்ள கரப்பான்பூச்சி மக்கள் கட்சி, நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ தேர்வு முறைக்கேடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நீட் வினாத்தாள் கசிவால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த விவகாரத்துக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி கடந்த ஜூன் 6 அன்று முதல் தில்லி, புணே, லக்னௌ ஆகிய நகரங்களில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, இன்று பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரிலும், நாளை கர்நாடகத்தின் பெங்களூரிலும் போராட்டம் நடத்துவதாக, அந்த இயக்கத்தின் நிறுவனர் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி மகாராஷ்டிரத்தின் நாக்பூரில் வரும் ஜூன் 16 ஆம் தேதி மாலை 4 மணிக்கு கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.

நாக்பூரின் சம்விதான் சவுக் பகுதியில் நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தில் அபிஜீத் தீப்கே, லடாக்கைச் சேர்ந்த ஆர்வலர் சோனம் வாங்சுக் ஆகியோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

The Cockroach janata party has announced that it will stage a protest in Nagpur, Maharashtra, on June 16.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.