FOLLOW US

ON GOOGLE DISCOVER

அதிபர் டிரம்ப்பை கொல்ல ஈரான் சதி! இஸ்ரேலின் உளவுத் தகவலால் பரபரப்பு!கரூருக்கு முதல்வா் ஜோசப் விஜய் இன்று வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஉலகிலேயே அதிக மீன்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 2-ஆவது இடம்: குடியரசு துணைத் தலைவா் பெருமிதம்பயங்கரவாத எதிா்ப்பு: ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ரஷியா உறுதி தெற்கு ரயில்வேயில் மறுசீரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்கள் விரைவில் திறப்பு
/

நீட் வினாத்தாள் கசிவு! 21வது நாளாக கரப்பான்பூச்சி மக்கள் கட்சி போராட்டம்!

தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் 21 ஆவது நாளாகப் போராட்டம் நடத்தி வருவது குறித்து...

News image

தில்லி போராட்டத்தில் சோனம் வாங்சுக் மற்றும் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே... - Instagram/cjp

Updated On :10 ஜூலை 2026, 9:57 am IST

நீட் வினாத்தாள் கசிவுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டுமென வலியுறுத்தி தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் 21 ஆவது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி நாட்டின் பெரும் இயக்கங்களில் ஒன்றாக உருவாகியுள்ள கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் பெங்களூரு, ஜெய்ப்பூர், அமிர்தரஸ் உள்ளிட்ட நகரங்களில் போராட்டம் நடத்தினர்.

இந்த விவகாரம் குறித்து, தில்லியிலுள்ள ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி முதல் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் மற்றும் லடாக்கைச் சேர்ந்த ஆர்வலர் சோனம் வாங்சுக் இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, கடந்த சில நாள்களாக தில்லியின் பல்வேறு பகுதியில் கனமழை பெய்து வரும் நிலையிலும், இன்று 21 ஆவது நாளாக இந்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 28 அன்று முதல் சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தி வருகின்றார். கரப்பான்பூச்சி மக்கள் கட்சி மற்றும் சோனம் வாங்சுக்கின் போராட்டத்துக்கு காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளித்துள்ளன.

இருப்பினும், தொடர்ந்து நாட்டின் பல்வேறு பிரச்னைகளுக்குக் குரல் கொடுத்து வந்த திரை மற்றும் விளையாட்டு பிரபலங்கள் அனைவரும் இந்த விவகாரத்தில் மௌனத்தைக் கடைபிடித்து வருவதாக இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.

Summary

cjp have been staging a protest in Delhi for the 21st consecutive day for the NEET question paper leak.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.