உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் நாளை அமிர்தசரஸில் போராட்டம்!

பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் நாளை போராட்டம்...

CJP

கரப்பான்பூச்சி மக்கள் கட்சி - படம் - எக்ஸ்

Published On :

பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரில், கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் நாளை (ஜூன் 13) போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.

இளைஞர்கள் அனைவரும் கரப்பான்பூச்சி எனும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் விமர்சனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அபிஜித் திப்கே என்பவர் தொடங்கிய கரப்பான்பூச்சி மக்கள் கட்சி எனும் சமூக வளைதளப் பக்கம் மாபெரும் இயக்கமாக உருவாகியுள்ளது.

நாட்டில் நடைபெறும் கல்வி முறைக்கேடுகளைக் கண்டித்து இந்த இயக்கத்தின் தலைவர் அபிஜித் திப்கே தலைமையில், முதல்முறையாக கடந்த ஜூன் 6 அன்று தில்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் மாபெரும் போராட்டம் நடத்தினர்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

இதையடுத்து, மகாராஷ்டிரத்தின் புணேவில் உள்ள சாவித்ரிபாய் பூலே புணே பல்கலைக்கழகத்தில், கடந்த வியாழக்கிழமை அன்று கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் தங்களின் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரையில் தங்களின் போராட்டம் தொடரும் எனக் கூறியிருந்த கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் நாளை (ஜூன் 13) பஞ்சாபின் அமிர்தசரஸில் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதுபற்றி, வெளியான அறிவிப்பில், தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமெனவும், நீட் மற்றும் சிபிஎஸ்இ தேர்வுகளில் நடைபெறும் முறைக்கேடுகளைத் தடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி அமிர்தசரஸின் கோல்டன் கேட் பகுதியில் நாளை மாலை 4 மணிக்குப் போராட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பெங்களூரு, ஜெய்ப்பூர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தவுள்ளதாக, அபிஜித் திப்கே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Cockroach Janata Party to hold protest in Amritsar on June 13

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.