நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம் இந்தியன் ஆயில் கார்ப்பரேோஷன் நிறுவனம். பொதுத்துறை நிறுவனமான இந்நிறுவனத்தின் பல்வேறு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் நிரப்பப்பட உள்ள தொழில்பழகுநர் (அப்ரண்டிஸ்) பயிற்சிக்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனன் .
மொத்த காலியிடங்கள்: 1450
பயிற்சியின் பெயர்: Trade Apprentice
காலியிடங்கள் ஏற்பட்டுள்ள டிரேடுகளின் விபரம் வருமாறு:
1.Fitter
2.Electrician
3.Machinist
4.Instrument Mechanic
5.Electronic Mechanic
தகுதி: பத்தாம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் Fitter,Mechanical,Electrician, Machinist, Instrument & Electronic Mechanic போன்ற ஏதாவதொரு டிரேடில் 2 ஆண்டு ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும். ஐடிஐ படிப்பானது என்சிவிடி அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டும்.
பயிற்சியின் பெயர்: Trade Apprentice (Chemical Plant Operator)
தகுதி: Maths, Physics, Chemistry,Industrial Chemistry போன்ற ஏதாவதொரு துறையில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சியின் பெயர்: Trade Apprentice (Data Entry Opera-tor)
1. Data Entry Operator (Fresher)
தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.
2. Data Entry Operator (Skilled)
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் சம்மந்தப்பட பணிப் பிரிவில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சியின் பெயர்: Technical Apprentice
காலியிடங்கள் ஏற்பட்டுள்ள டிரேடுகளின் விபரம் வருமாறு:
1.Mechanical
2.Electrical
3.Instrumentation
4.Civil
5.Electronics
6.Electrical & Electronics
தகுதி: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள சம்மந்தப்பட்ட பொறியியல் பாடப்பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பயிற்சியின் பெயர்: Graduate Apprentice (Secretarial Assistant)
தகுதி: பிஏ, பி.காம், பி.எஸ்சி, பிபிஏ போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சியின் பெயர்: Graduate Apprentice (Accountant)
தகுதி: பி.காம் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30.6.2026 தேதியின்படி 18 முதல் 24-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு அரசு விதிமுறைப் படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.
உதவித்தொகை: இந்தியன் ஆயில் கார்பொரேஷன் விதிமுறைப்படி உதவித்தொகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள், சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். இது தொடர்பான விபரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் Trade Apprentice பயிற்சிக்கு www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், Technician Apprentice மற்றும் Graduate Apprentice பயிற்சிகளுக்கு www.nats.education.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின்பு www.iocl.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.7.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
IOCL Recruitment 2026 for Apprentice Posts
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நைனி ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில் ஆப்ரேட்டர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பெல் நிறுவனத்தில் டெக்னீஷியன் வேலை: ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? மசாகான் கப்பல் கட்டும் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி!

கல்பாக்கம் அணுமின் கழகத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி: காலியிடங்கள்: 158
விடியோக்கள்

நாராயணபுரம் ஏரி தூர்வாரும் பணிகள்: அமைச்சர் ஆனந்த் நேரில் ஆய்வு | Minister N Anand |




