தென்மாநில முதல்வர்கள் மாநாட்டை புறக்கணிக்கும் ரங்கசாமி!எழும்பூா் புறப்படும் முக்கிய விரைவு ரயில்கள் இன்றுமுதல் தாம்பரத்திலிருந்து இயக்கம்கும்மிடிப்பூண்டி-கூடுா் 3,4-ஆவது ரயில் வழித்தடங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்அரசுப் பள்ளி மாணவா்கள் 614 பேருக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடுமத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டலக் குழு இன்று கூடுகிறது: நதிநீர்ப் பங்கீடு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதம்தமிழகத்தின் கடனை 10 ஆண்டுகளில் அடைக்கும் வழி: சௌமியா அன்புமணி யோசனைஅலுமினிய மின் கம்பிகள் வாங்கியதில் ரூ.1,028 கோடி முறைகேடு: தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை நில வகை பயன்பாடு மாற்றுவதற்கான என்ஓசி: வேளாண் துறையில் இனிபெற வேண்டியதில்லை
/

இஸ்ரோவில் டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கான ஒரு ஆண்டு தொழில் பழகுநர் பயிற்சி குறித்து...

News image

இஸ்ரோவில் ஐடிஐ, டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் - இஸ்ரோ

Updated On :19 ஆகஸ்ட் 2026, 10:37 pm IST

பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில்(இஸ்ரோ) டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கான ஒரு ஆண்டு தொழில் பழகுநர்(அப்ரண்டிஸ்) பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் வரும் 28 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விவரம் வருமாறு:

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: URSC:03:2026

பயிற்சியின் பெயர்: Graduate Apprentice

காலயிடங்கள்: 220

தகுதி: பயிற்சி வழங்கப்படும் பொறியியல் பாடப் பிரிவில் பிஇ முடித்திருக்க வேண்டும்.

உதவித்தொகை : மாதம் ரூ.12,300

பயிற்சியின் பெயர்: Technician Apprentice

காலயிடங்கள்: 120

தகுதி: பயிற்சி வழங்கப்படும் பொறியியல் பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

உதவித்தொகை: மாதம் ரூ.10,900

பயிற்சியின் பெயர்: Diploma in Commercial Practice

காலயிடங்கள்: 70

தகுதி: Commercial Practice பாடத்தில் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

உதவித்தொகை: மாதம் ரூ.10,900

ஏற்கனவே அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள், கொடுக்ப்பட்டுள்ள கல்வித் தகுதியைவிட கூடுதல் கல்வித் தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

மேற்கண்ட அனைத்து பயிற்சிகளுக்கும் 2022-ஆம் ஆண்டிற்கு பிறகு படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

தேர்வு செய்யப்படும் முறை: பொறியியல் துறையில் டிப்ளமோ, பிஇ, பி.டெக் படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர்.

இதற்காக நேர்முகத்தேர்வு தொடர்பான விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.nats.education.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் மூலம் தங்களது தகுதி குறித்த விவரங்களை முன்பதிவு செய்து கொள்ளவும். பின்னர் www.web.umang.gov.in/Landing என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 28.8.2026

Summary

ISRO Recruitment to the posts of Graduate Apprentice Trainee

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.