புராஜெக்ட்ஸ் மற்றும் டெவலப்மென்ட் இந்தியா லிமிடெட் (பிடிஐஎஸ்) என்பது 'மினி ரத்னா' வகை-I அந்தஸ்து பெற்ற ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். இந்த நிறுவனம், வடிவமைப்பு பொறியியல் மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்கும் ஒரு முன்னணி அமைப்பாகும். 60 ஆண்டுகளுக்கு மேலாக உரத் தொழிற்சாலைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய வேதியியல் ஆலைகள், சுத்திகரிப்பு நிலையங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு, மின்சாரம், பெட்ரோகெமிக்கல், வீட்டுவசதி, நகரியம் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்கள் ஆகியவற்றில் வடிவமைப்பு, விரிவான பொறியியல் பணிகள், கொள்முதல், திட்ட மேலாண்மை, கட்டுமான மேற்பார்வை மற்றும் செயல்பாட்டுத் தொடக்கம் ஆகிய பணிகளில் அனுபவம் கொண்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள அலுவலகங்களில் ஒப்பந்தகால அடிப்படையில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு பொறியியல் துறையில் பிஇ, டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து ஜ5லை 27-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: HR/71/26/01
பணி: Graduate Engineer (Scale 1 & 2)
காலியிடங்கள்: 99
சம்பளம்: மாதம் ரூ.47,000 - 57,000
தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல், கணினி அறிவியல், தீ மற்றும் தொழில்சார் பாதுகாப்பு, இன்ஸ்ட்ருமெண்டேஷன் போன்ற ஏதாவதொரு பிரிவில் பிஇ, பி.டெக் முடித்து இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 32-க்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரி வினர்களுக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர்களுக்கு அரசு விதிமுறைப்படியும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
பணி: Diploma Engineer (Scale - 1 & 2)
காலியிடங்கள்: 21
சம்பளம்: மாதம் ரூ.31,000 -36,000
தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், இன்ஸ்ட்ருமெண்டேஷன், மெட்ரியல் ஹண்ட்லிங் போன்ற ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 37-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: பணி அனுபவம், நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள், சான்றிதழ் சரிபார்த்தல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இது பற்றிய விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். நேர்முகத் தேர்விற்கான இ-அட்மிட் கார்டு இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தவும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிறிவினர்களுக்கு ரூ.800. இதர பிரிவினர்களுக்கு ரூ.400. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.pdilin.com என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 27.7.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
Applications are invited for engagement of eligible candidates PURELY ON CONTRACT BASIS UPTO THREE (3) YEARS duration for various posts
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

ரூ. 1,20,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: எம்.எஸ்சி முடித்தவர்களுக்கு வாய்ப்பு

மத்திய அரசு நிறுவனத்தில் டெக்னீஷியன் பணிகள்: விண்ணப்பிப்பது எப்படி..?








