மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அட்டகாசமான வேலை வாய்ப்பு அறிவிப்பு!

பொதுத்துறை நிறுவனமான நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு குறித்து...

News image

நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அட்டகாசமான வேலை வாய்ப்பு அறிவிப்பு - NICL

Updated On :26 ஜூலை 2026, 3:27 pm IST

மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பொதுத்துறை நிறுவனம் நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம்.

இந்நிறுவனம் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகளைக் கொண்டு லாபகரமாக இயங்கி வரும் முன்னணி பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்று.

இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள 500 உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான ஆர்வமுள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: அசிஸ்டென்ட்

மொத்த காலியிடங்கள்: 500

மாநிலங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்:

தமிழகம் 49, மஹாராஷ்டிரம் 57, மேற்கு வங்கம் 46, ராஜஸ்தான் 36, கேரளம் 35, கர்நாடகம் 30, உத்தரப்பிரதேசம் 24, தில்லி 20, மத்தியப் பிரதேசம், அசாம், சத்தீஸ்கரில் தலா 18, , குஜராத் 34, ஒடிசா 16, ஆந்திரம் 14, தெலங்கானா 15, பீகார் 14, ஜார்க்கண்ட், பஞ்சாப் தலா 10, உத்தராகண்ட் 8, நாகாலாந்து, சிக்கிம் தலா 1, அருணாச்சலப் பிரதேசம் 5, ஹரியாணா 3, கோவா, ஹிமாச்சலப் பிரதேசம், மேகாலயா, மிசோரம், திரிபுகா தலா 2.

தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பத்தாரரின் மாநிலத்தின் உள்ளூர் மொழியில் நன்றாக எழுத, படிக்க மற்றும் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு மற்றும் தளர்வுகள் : 1.7.2026 தேதியின்படி 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். அதாவது 2.7.1996-க்கு முன்பாகவோ அல்லது 1.7.2005-க்கு பிறகோ பிறந்திருக்கக் கூடாது.

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ.63,000 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரண்டு கட்ட ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 850. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: https://nationalinsurance.nic.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 7.8.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

National Insurance Company Limited invites online recruitment applications through NICL website...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.