ஓனர்களின் பாணியில்... போராடவிருந்த மருத்துவப் பணியாளர்கள் வீட்டுக் காவல்! உதயநிதி கண்டனம்மரகதம் குமரவேல், சத்யபாமா தவெக எம்எல்ஏக்களாக பதவியேற்பு!பொய் பிரசாரங்களை முறியடித்து வெற்றி பெற்றுள்ளோம்: மரகதம் குமரவேல்லஞ்சம் கொடுத்ததற்கு தானே சாட்சி! மரிய வில்சனுக்கு எதிரான மனு தள்ளுபடிஜேஎன்யு மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு! காங்கிரஸ் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு!இந்தியா கூட்டணி தலைவர்களை சந்திக்க தலைமை நீதிபதி மறுப்பு!

உதவித்தொகையுடன் ரயில்டெல் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி: டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

ரயில்டெல் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிக்கான அறிவிப்பு குறித்து...

ரயில்டெல் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி

Published On :

ரயில் டெல் நிறுவனத்தில் உதவித்தொகையுடன் அளிக்கப்படும் தொழில்பழகுநர் பயிற்சிக்கு டிப்ளமோ, பிஇ, பி.டெக் முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: RCIL/2024/P&A/27/1

பயிற்சி: Graduate Apprentice

காலியிடங்கள்: 32

உதவித்தொகை: மாதம் ரூ.14,000

பயிற்சி: Technician Apprentice

காலியிடங்கள்: 18

உதவித்தொகை: மாதம் ரூ.12,000

தகுதி: பொறியியல் துறையில் Electronics & Telecommunication, Computer Science, Electical & Electronics போன்ற ஏதாவதொரு பிரிவில் பிஇ, பி.டெக் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். ஏற்கெனவே அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள், கொடுக்கப்பட் டுள்ள கல்வித் தகுதியைவிட கூடுதல் தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். இதற்காக நேர்முகத் தேர்வு நடத்தப்படும். நேர்முகத் தேர்வு தொடர்பான விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.nats.education.gov.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு www.railtel.in என்ற இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 27.8.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

Notice regarding Apprenticeship Training at RailTel Corporation of India Ltd

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.